பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 141

11-3 பட்டினத்தில் பெரு விருந்து

நீர்ப்பாயல் ப்ட்டினத்து, மகளிர் நலம் பாடுவார்போல், அந்நகரத்து வணிகச் செல்வரின் வளம் பாடிய புலவர், அடுத்து, ஆங்குச் செல்வார்க்கு, அவர் வழங்கும் விருந்துச் சிறப்பினை விளக்கத் தொடங்கினார். - . .

திரையன் அரசோச்சியிருந்த சங்க காலத்தில், தமிழகத் தில் சிறந்து விளங்கிய துறைமுகப் பட்டினங்களில் நீர்ப் பாயல் துறையும் ஒன்று. ஆங்கு வாழ்ந்தோரில், தமிழகத்து வணிகரினும், யவனர் முதலாம் பிறநாட்டு வணிகர்களே மிகப் பலராவர். மொழியாலும், பழக்கவழக்கங்களாலும் வேறுபடுவது போலவே, உணவாலும் வேறுபடும் அவர் களோடு பழகி, தமிழகத்து வணிகர்களும், அவர்கள் உணவு முறையினை, ஏற்றுக்கொண்டு விட்டமையால், நீர்ப்பாயல் பட்டினத்தில், அவர்கள் விரும்பி உண்ணும் பன்றிக் கறியும், கள்ளுமே கிடைக்கும். அதனால் புலவரும், பன்றிக் கறி பற்றிக் கூறத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கியவர். நினைவில், அப்பன்றி, அது விரும்பும் பிணவு, அது ஈனும் குட்டிகள், அவை வீழ்ந்து புரளும் சேறு,சேறுபட உதவிய கள் அக்கள் விற்கும் கடை அமைப்பு ஆகியவை நிரலே வந்து நிற்கவே, அவை பற்றிய விளக்கத்தை முதற்கண் மேற்கொண்டார். . . . - - . . . . .

கள் உண்பார் எவ்வளவு பேர் வந்தாலும், எந்த நேரத் தில் வந்தாலும், இல்லை என்னாது வழங்கவல்ல பெருமை உடையது அக் கள்ளுக்கடை அக்கடை வாயிலில், அது கள்ளுக்கடை என்பதைத் தொலைவில் உள்ளாரும் அறிந்து கொள்ள உதவும் அடையாளக் கொடி பறந்து கொண்டி ருக்கும். கடை முன்புறம் புல் போகவும், மேடு பள்ளம் அகலவும் நன்கு செதுக்கப் பட்டிருக்கும். கள்ளுச் சாடிக்கு நாள்தோறும் மலர் மாலை சூட்டி வழிபாடு செய்வது வழக்க,