பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பெரும்பாணாற்றுப்படை sfer5alag -

வீழ்ந்தபோது பானை சிறிது அசைந்ததே ஒழிய உருண்டு விடவில்லை என்று கண்டு, கல்க்கம் ஒழிவர். கலக்க மிகுதியால், வீழ்ந்த தேங்காயை, மறந்திருந்த அவர்கள்: அக்கலக்கம் கழிந்ததும், காயைக் கண்ணுற்றதும், அக்காயை மட்டை நீக்கி உடைத்து உண்டு ஓரளவு பசி தீர்ந்து மகிழ்ச்சி உறுவர். - - -

வளம் மிக்க அத்தகைய இடங்களைக் கடந்து செல்லும் பேரது, இடையிடையே, செல்வவளம் மிக்க சில நகரங் களையும் காணலாம். அந்நகரத்து மக்கள் நிறை வாழ்வு வாழ்பவர்கள். எங்கு நோக்கினும் மாடமாளிகைகளே காணப் படும். வானளாவ உயர்ந்து நிற்கும் அவை, அடுத்தடுத்து இடையீடின்றிக் கட்டப்பட்ாமல், ஒவ்வொன்றும் நாற்புறங் களிலும் சுற்றுச்சுவர் அமைய தனித்தனியாகவே கட்டப் பட்டிருக்கும். அதுமட்டும் அன்று அம்மக்கள், ஆடல் பாடல் களிலும் தம்மை மறந்து ஈடுபட்டிருப்பர். வள்ளிக்கூத்து போலும் பல கூத்துக்கள், ஆங்குத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். தன்னாட்டு மக்கள்ை அத்தகைய பேரின் பத்தில் ஆழ்த்திட வல்ல பெருவளம் கொழிக்கும் நாடு, திரையன் ஆட்சி நிலவும் நாடு; பெரும்பாண அத்தகைய வளம் சிறக்கும் அந்நாட்டின் பல பகுதிகளையும் கடந்து சென்று, கடைசியில் கச்சி மாநகர். புகுவாயாக என்றார். -- - •. -

‘கறையடிக் • . . . குன்று உற்ழ் யானை மருங்குல் ஏய்க்கும் வண்தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பைத் தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோள் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம், வீழ் இல் தரழைக் குழவித் தீநீர்க் - கவைமுலை யிரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்