பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

இனிய நீரையும், கவைமுலை யிரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்-கவைத்த முலைகளையுடைய பெண் யானையின் வாயிடத்து வெண் தந்தங்களை ஒக்கும், குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்-குலையிலேயே கனிந்த வாழையின் வெண் பழத்தையும், திரள் அரைப் பெண்ணை நூங்கொடு-திரண்ட அடிமரத்தினையுடைய பனையின் நுங்கோடு, பிறவும் தீம்பல் தாரம்-வேறு பல இனிய பண்டங்களையும், முனையின்-தின்று வெறுப்பின், சேம்பின் முளைப்புற முதிர்கிழங்கு ஆக்குவிர்-சேம்பினுடைய, முளைக்கும் திறம் பெற முளைவிட்டு முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர்கள், பகல் பெயல் மழை வீழ்ந்தன்ன-பகற்போதில் பெய்யும் மழை கால் இறங்கினால் அன்ன, மாத்தாள் கமுகின்பெரிய தண்டினை உடைய கமுகந் தோட்டத்தின், புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்-பக்கத்தே சூழ்ந்த, தென்னையின் முப்பக்கங்களையுடைய முற்றிய காய், ஆறுசெல் வம்பலர் காய் பசிதீர-வழிப் போவாரின் கொடிய பசி தீரவும், சோறு அடு குழிசி இளச-அவர் சோறு ஆக்குகின்ற பானை அசையவும், விழுஉம், வியாயானர் வளங் கெழு பாக்கத்து-விழும், கெடாத புது வருவாயினையுடைய வளம் மிக்க பாக்கங் களில், பல் மரம் நீள் இடைப் போகி-பல மரங்கள் வளர்ந்த நீண்ட வழிகளைக் கடந்து சென்று, விளங்கு சுவர் உடுத்த-விளங்குகின்ற மதிலால் குழப்பட்ட, விண் தோய் மாடத்து-வான் அளவா உயர்ந்த மாடங் களை உடைய, நன் நகர்-நல்ல நகரங்களில், வாட வள்ளி வளம் பல தருஉம்-வள்ளிக் கூத்து ஆடி ஆடி மகிழ்தற்குக் காரணமான வளங்கள் பலவற்றையும் தருகின்ற, நாடு பல கழிந்த பின்றை-நாடுகள் பலவற்றைக் கடந்து போன பிறகு - -