பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

திருமாலை வாழ்த்தி, சிறிதுதும் கருங்கோட்டு இன் னியம் இயக்கினிர் கழிமின்-சிறிது நேரம், உம்முடைய கரிய தண்டுடைய இனிய யாழை இயக்கி, பின்னர் அவ்விடம் விட்டு அகன்று போவீராக. -

13-1 கச்சிமாநகர் மாண்பு

மரங்களுள், காய்த்துப் பயன்தரா மரங்கள், பூத்துக் காய்க்கும் மரங்கள், பூவாதே காய்க்கும் மரங்கள் என எத்தனையோ வகையிருப்பினும், பூவாதே காய்த்துக் கனிந்து, விரிந்து. சுளை கொட்டும் பலா மரத்தையே புல் திசைப் பறவைகளும் சென்று அடைவது போல், கடல் சூழ்ந்த உலகில், எண்ணற்ற பெரு நகரங்கள் இருந்தாலும் பல்வேறு சமயக் கடவுளர்களும், சமயத் தலைவர்களும் கோயில் கொண்டிருக்க, திங்கள் தோறும் திருவிழா என ஆண்டு முழுவதும் விழாக்கள் எடுக்கப் படுவதால் உலக மக்கள் எல்லாம் தன்பாலே வந்து திரளும் தனிச் சிறப்பு வாய்ந்த பெரு நகரம், காஞ்சி மாநகரம். : .

அத்தகைய பெருமை மிகு கச்சிமா நகரம் அடையும் பெரும்பாணன், முதற் பணியாக ஆங்குக் கோயில் கொண்டி ருக்கும் பெருமாளை வணங்கிய பின்னர், அவன் செல்ல வேண்டிய இடம், திரையன் உறையும் அரண்மனை யாதவின், அதுபற்றிக் கூறத் தொடங்கிய புலவர், கோட்டையைச் சூழ உள்ள செண்டு வெளிகளில் இடம் பெற்றிருக்கும் நாற்படைத் தளங்கள், வாணிக நிலையங்கள், காவற்காடு, கோட்டை வாயில் ஆகியவற்றைப் பற்றியும் கூறத் தொடங்கினார்.

பழையகாலத்து நாற்படையுள், பெரும் பங்கு கொள் வது யானைப்படை. மேலும், திரையன் நாட்டு வேங்கட மலையில் யானைகள் மிகுதி. அதனால், அவன் பால்,

எண்ண்ற்ற போர்க்களிறுகள் இருந்தன. அவை ஒரு பெரிய