பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . . . . 159

சோலையுள் நிறுத்தப் பட்டிருக்கும். ஆங்கு, நெய் இட்டு மிதித்துக் கலந்த உணவு, கவளம் கவளங்களாகப் பிரிக்கப் பட்டு, யானைகளுக்கு இடப்படும். அவ்வாறு இடப்படும் கவளத்தில் சிறிது குறைந்து போவதால் யானைகள் கவலை. யுறுவது இல்லை. அதனால், குரங்குகள் யானைக்கு அஞ்சுவ தில்லை. ஆனால், இடப்படும் உணவு, குரங்குகள் கவர்ந்து கொள்வதால் குறைவுற்று, அதனால் களிறுகளின் உரம் குறைந்து விடுமோ என அஞ்சும்.பாகர்கள், அக் குரங்குகளை விரட்டிக் கொண்டே இருப்பர். அதனால், அக் குரங்குகள் அப்பாக்ர்களைக் கண்டு அஞ்சும், என்றாலும், சூல் முதிர்ந்த நிலையில், ஏனைய குரங்குகள் போல், ஊரெல்லாம் திரிந்தோ, காடெல்லாம் அலைந்தோ,, உணவு தேடி உண்ண இயலாது ஒய்ந்து கிடக்கும் மந்திகள் சிலவும் அவற்றிடையே இருப்பதால், அவை, பாகர் ஏமாந்திருக்கும் காலம் பார்த்துக் கவளத்தைக் கவர்ந்தோடிச் செல்லும். .

இது ஒரு பால், பிறிதோரிடத்தில், அண்மையில் பிடிக் கப்பட்டு, பழகுவதற்காகக் கொண்டு வரப்படும் யானை களை, அவற்றின் சினம் அடக்கி, அடங்கும் வரை பிணித்து வைப்பதற்காக, வெள்ளீடு இன்றி வயிரம் பாய்ந்த மரத்தால் ஆன கட்டுத் தறிகள் வரிசையாக நடப்பட்டிருக்கும்.

சோலையின் நீங்கிப், படை போகு பெருந்தெருவில் அடிவைத்தால், அது, மக்கள் வழங்குவதற்கு இயலாவாறு பாழ்பட்டிருப்பது தெரியும். அத்தெரு வாழ்மக்களை அது பற்றிக் கேட்டால், அத்தெருவில், நாள் தோறும் ஒடும் தேர்களின் எண்ணிக்கை மிகுதியாலும், அவற்றின் நெடிய, பெரிய, வடிவமைப்பாலும், அவற்றில் பூட்டப்படும் குதிரை கள், கா ற்றினும் கடுக ஈர்த்து ஒடுவதாலும், அது, அவ்வாறு, குண்டும் குழியுமாகப் பாழ்பட்டுப் போகும் என அறிவிப்பர், அவர்களின் சொல்லோவியம் மூலமாகவே தேர்ப்படை, குதிரைப்படைகளின் பெருமையை உணர்ந்து கொள்வதால்,