பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

இருக்கும். இடம் சென்று அவற்றைக் காணாது, அடுத்து நடந்தால் வீரர் வாழிடம் அடையலாம்.

எதிர்த்து நிற்கும் படைவரிசையை அழிப்பதல்லது, அப்படை வரிசை முன்அழியா ஆற்றல் மறவர்கன். அதனால், அவர்கள் அடையும் புகழுக்கு ஒர் எல்லை வகுக்க இயலாது. புகழ் எல்லையைக் கடந்த அவ்வீரர் குடியிருப்பபைக் கடந்து சென்றால், வாணிக வீதி வரும். ஆங்குப் பொருள்களை வாங்குவோரும், விற்ப்ோருமாக மக்கள் கூட்டம் பெருகி நிற்பதால், அத்தெருவைக் கடந்து செல்வதே அரிதாக் இருக்கும். ஒருவாறு கடந்துவிட்டால், காவற் காட்டையும், அதை அடுத்து அரண்மனை வாயிலையும் அடையலாம்.

அது அரண்மனை வாயில். அகத்தே அரசன் இருக்கை. அதனால், யாரேனும் பகைவர் அறியாது உள் நுழைந்து ஊறு விளைவிக்கவும் கூடும் என்ற அச்சத்தால் வாயில் அடைபட்டு இருக்குமோ என்ற ஐயஉணர்வோடு அணுகிப் பார்த்தால், அது திறந்தே கிடக்கும். திரையன் ஆற்றலும், அவன் படைப் பெருமையும் அறிந்திருக்கும் அவன் பகைவர், அவன் நாட்டின் எல்லையையும் அணுக மாட்டார். ஆதலின் அவர்களுக்கு அஞ்சி, வாயிலை அடைக்க வேண்டிய நிலை என்றுமே எழாது, மேலும், திரையன் பெருங் கொடை யாளன், அவன் புகழ் பாடிப் பரிசில் பெறும் நினைவோடு, இரவலர்கள், எப்போதும் வந்த வண்ணமே இருப்பர். அவர் களை வரவேற்க, அவ்வாயில், எப்போதும் திறந்த்ேயி.

வாயிலைக் கடந்தால் அரசன் கோயில். அது, செங் கல்லும், இட்டிகையும் கொண்டு வானளாவக் கட்டப் பட்டிருக்கும். நாற்புறங்களிலும், படைபோகு பெருவீதி, வணிகர் வீதி, என வரிசையாக வீதிகள் இடம் பெற்றிருக்க, அரசன் பெருங்கோயில் நடுவே அமைந்திருக்கும், அந்நகர் ‘அமைப்பு, வட்டம், வட்டமாக. இதழ்கள் விரித்திருக்க்,