பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 167.

14: 1 திரையன் காளோலக்க நலன்

“திரையன் கச்சியுள் உள்ளான்; காணச் செல்க’ எனப் பெரும் பாணனுக்கு விடை கொடுத்த புவவர், திரையனைக் கண்டு அவன் புகழ் பாடுவதன் முன்னர், அவனைப் பணிந்து அவன் ஏவல் கேட்க வந்திருக்கும் வேற்றரசர் கூட்டம் காத் திருக்கும் அரண்மனை முற்றத்தின் கொற்றத்தையும், அவன் நாட்டு மக்கள் முறை அளிப்பான் வேண்டியும், குறைதீர்ப் பான் வேண்டியும் கூடியிருக்கும் அரசவை மாண்பையும் அறிந்து கொண்டால், அவன் புகழை முழுமையாகப் பாடிப், பாராட்ட இயலும் என உணர்ந்தமையால், அவைபற்றிக் கூறத் தொடங்கினார். . -

திரையன் அரண்மனை முற்றத்தில், அரசர் பலர் குழுமி யிருப்பர். வந்திருக்கும் அவர்கள் தாம் மட்டும் தனித்து வாராது, திரையனுக்குத் தம் காணிக்கையாகத் தருவான் வேண்டித், தங்கள் நாட்டிற்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்தன. வர்ய பொருள்களாகவே தேர்ந்து உடன் கொண்டு வந்திருப்பார். அவர்களின் முகத்தைப் பார்த்தால், சிலர் உள்ளத்திவ் அன்பு ஊற்றெடுப்பது தெரியும்; சிலர் உள்ளத் தில் அச்சம் குடி கொண்டிருப்பது புலனாம். அவர்கள் ஒவ் வொருவரும் திரையனைக் காண, உள்ளே நுழைவதற்குத் தான் முன், நீ முன் என ஒருவரை ஒருவர் முந்த முனைவர்.

இமையவர் உறைவதால் இமயம் என அழைக்கப்பெறும் உயர் மலையிலிருந்து, வெள்ளிப் பனிப் படலம் உருகப் புெருகிப், பொற்பாறைகளை உடைத்துத் துகளாக்கி அரித்துக்கொண்டு, புணை இன்றிக் கடக்க இயலா ஆழமும், அகலமும் உடையதாக உருண்டோடி வரும் கங்கைப் பேராற்றின் ஒரு கரை வாழ் மக்கள், ஆங்கு, இயற்கை விளை வித்த இடர்ாலோ,இறை அளித்த துயராலோ வாழமாட்டா நிலையுற்று வாழிடம் விடுத்து, வாழப் புது இடம் தேடி,