பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

திரையன், அல்லன. கடிந்து நல்லன. ஒம்பும் அறநெறி - அறிந்தவன்; அதனால், அந்நாடு அரசரான் அழிவுறுவ தில்லை. திரையன் நாடு காவல் செறிந்த நாடு; அதனால், வழிப் போவாரை வருத்தி, அவர் கைப்பொருளைக் கவர்ந்து செல்லும் ஆறலை கள்வரை அந்நாட்டில் எங்கும் காணல் அரிது. அவன் அறம் விரும்பும் பெருங்கோலன்; அதனால், அவன் நாட்டு மக்களை, இடியும், இடித்துத் துயர் தருவதில்லை. பாம்புகளும் பிறரைக் கடித்துத்துயர் செய்யா, காட்டு வாழ் புவி முதலாம் கொடு விலங்குகளும், மக்களுக்குக் கொடுமை செய்வதில. அதனால், அவன் நாடு நோக்கி வரும் பதியோர், தாம் வேண்டும் இடத்தே வேண்டியாங்கு இருந்து இளைப்பாறிச் செல்வர். என்னே அவன் நல்லாட்சி! -

அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன் படர்குவி ராயின்

வேட்டாங்கு - 3. அசைவழி அசைஇ, கசைவழித் தங்கிச் சென்மோ’ .

-76TTற்றுப்படை-39-45

நாடு நலமெலாம் பெற்று நனி சிறந்து விளங்க நாடாண்ட நல்லோனாய திரையன் வரலாற்றினை விளங்க உணரும் வாய்ப்பு வாய்த்தினது; அவன் நாடு, அந்நாட்டு வளம், அவன் ஆட்சித்திறம் ஆகியவற்றை விளங்க விரித் துரைத்த புலவர்களும், அவன் வரலாற்றினை விரித்துரைத் தாரல்லர். . . . . . . - • * . . . . . .

திரையன் திருமாலை முதல்வனாகக் கொண்ட குடியிற் பிறந்தவன்: திரைதரு மரபின் வழிவந்தவன் திரையன் எனும் பெயருடையான்; சேர, சோழ பாண்டியர் மூவரிலும் சிறந்தவன்: கடலிற் பிறந்த வளைகள் பலவற்றுள்ளும் ... வலம்புரிச் சங்கு சிறந்ததாதல் போல், அரசர் அனைவரினும்