பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 173

பொன்கொழித்து இழிதரும் போக்கரும் கங்கைப் பெருநீர் போகும் இரியல்மாக்கள், ! ஒருமரப் பாணியில் தூங்கி யாங்குத் தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழி இச் செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்துப், பெருங்கை யானைத் கொடுந்தொடிப் படுக்கும் கருங்கைக் கொல்லன், இரும்புவிசைத்து எறிந்த கூடத் திண்ணிசை வெரீஇ, மாடத்து இறையுறை புறவின் செங்கால் சேவல் ... - இன்துயில் இரியும் பொன்துஞ்சு வியன்நகர்க் குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் - பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டுநர்க்கு அருளி, இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக் கொடைக் கடன் நிறுத்த கூம்பா உள்ளத்து உரும்பில் சுற்றமொடு இருந்தோன் குறுகி’ - . . . - (421-447)

_6@:

நச்சிச் சென்றார்க்கு-தன்னை விரும்பித் தன்னை அடைந்தவர்க்கு,ஏமம் ஆகிய அளியும்-பாதுகாவல் ஆகிய அருளும், தெறலும்-தன்னை விரும்பாத பகைவர்க்குக் கேடு ஆகிய அழித்தல் தொழிலும், எளிய ஆகலின்தனக்குச் செய்தற்கு எளிய தொழில்கள்.ஆதலின், மலைந் தோர் தேஎம்-தன்னோடு போரிட்டோர் நாட்டின், மன்றம் பாழ்பட-ஊர்ப் பொதுவிடங்கள், மக்கள் வழக் கற்றுப் பாழ்பட்டுப் போகவும், நயந்தோர் தேஎம்தன்னை விரும்பியவர் நாட்டில், நன்பொன் பூப்பநல்ல பெர்ன் கொழித்துச் செழிக்கவும் அவற்றைக்கண்டு நட்புக் கொளல் வேண்டி நயந்திசினோரும்-நட்புக்