பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

T காண்பது இயலாது. அறிவும், ஆற்றலும் அளிக்கும் புகழினும் குலப் பெருமை அளிக்கும் புகழே பெரிதெனக் கருதுவர். இது மனித இயல்பு. இளந்திரையன் இதற்கு விலக்கானவன் அல்லன். அதனால், அவன் புகழ் பாடுவதன் முன்னர், அவன் குலப்புகழ் பாடுதல் நன்று எனக் கருதினார். அதனால், திரையன் குடியாம். தொண்டையர்குடிப் புகழ் பாடத் தொடங்கி விட்டார். .

தொண்டையோர், புலவர் பால் பெருமதிப்பு உடையவர். புலவர்களைத் தம் அவைக்கு அழைத்து, அவர் விரும்பும் அறுசுவை உணவு, ஆடை அணி ஆகிய அனைத்தும் வழங்குவர். அவ்வாறு வழங்குவதைத் தம் கடமையாகவே கொள்பவர். அவ்வாறு வழங்கி விடை கொடுத்த பின்னரே, வேறு பணி மேற்கொள்வர். வண்டுகள் மெர்ய்க்குமளவு மதநீர் வடிய மதம் கொண்டு திரியும் பெரிய களிற்று யானை மீது பாய்ந்து கொன்ற சிங்க ஏறு, அடுத்துப் பூனை எதிர்பட்டால் அதன் மீது பாய எண்ணாது. மாறாக, புலியைத் தேடிச் சென்றே பாயும். அதுபோலத் தம்மை பணிய மறுக்கும் பகைவர் மீது போர் தொடுத்துப் போகும் காலத்தில், ஒர் அரசை அழித்து வெற்றி கொண்ட பின்னர், மீண்டும் போர் வேட்கை எழுந்தால், அவர் நினைவு, பண்டு. அழித்த அரசினும் ஆற்றலில், அளவில், சிறிய அரசு, மீது இல்லாது; மாறாக, அன்று அழித்த அரசினும் ஆற்றல் மிக்க பேரரசு மீதே போர் தொடுத்துப்போவர். அத்துணை தறுகணாளர் தொண்டையோர். - -

போர் தொடுத்துப் புறப்பட்டுவிட்டால், பகைவர் கோட்டை காவற்காடு, ஆழ்ந்த அக்ழி, பல்வகைப் படைக் கலம் பொருத்தப்பட்ட பெருமதில் ஆகியன கொண்டு அழிக்கலாகாத் திறம் வாய்ந்ததாக இருப்பினும்,. அவை: அனைத்தையும் அழித்து அரணைக் கைப்பற்றிக் கொள்வர். அந்நிலையில், அரண் அழிவுற்று விட்டது. இனி. அதைத்