பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . - 183

அடுத்துச் சென்றால், பெரிய பெரிய கலங்கள், பாது காப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றை யும் திறந்து பார்த்துக் கொண்டே சென்றால், ஒன்றில், முனை முறியாமல் முழு வடிவில் வடித்து வைக்கப்பட் டிருக்கும் சோறு ஒன்றில் ஆட்டுக்கறி: ஒன்றில் கோழிக்கறி: ஒன்றில் மான் கறி, அடுத்துள்ள கலங்களில் வேறு வேறு வகையான அறுசுவை உண்டிகள் நிறைந்திருக்கக் காண்பீர் கள். அவற்றிலிருந்து எழும் மனம், உண்ணும் பசி இல்லா தாரையும் உண்ணத் தூண்டி விடும்.

அவற்றைக் காட்டிக் கொண்டே சென்று, இறுதியில், உண்ணும் இடம் அடைந்து அமர்த்துவன். சோறுண் கலம் இடையில் இருக்க, அதைச் சுற்றிலும் பல்வேறு கறி வகை களுக்கான கலங்களைத், திங்களைச் சூழ ஒளிவிடும் விண்மீன் சள் எனக் காட்சி அளிக்குமாறு உங்கள் முன் பரப்பி வைத்து அவற்றுள் நிறைய உணவு படைக்கப்பட்டதும், திரையன் உம் அருகில் அமர்ந்து இதில் ஒரு கவளம், இன்னும் ஒரு கவளம், எனக்காக ஒரு கவளம், அம்மாவுக்காக ஒரு கவளம் எனக் கூறி, தாய் தன் மகவுக்கு உணவோடு இன்ப அன்பு கலந்து ஊட்டுமாறு, உங்களை உண்பித்து, உண்ட நிறைவு தோன்ற, உங்கள் முகம் மலரக் கண்டு அக மகிழ்ந்து போவன். - -- -

‘அந்நிலை - நாவலம் தண்பொழில் வீவின்று விளங்க கில்லா உலகத்து நிலைமை தூக்கி - அங்கில்ை அணுகல் வேண்டி, கின் அரைப் பாசி..அன்ன சிதர்வை நீக்கி, - ஆவி அன்ன அவிர்நூல் கலிங்கம் -

இரும் பே ரொக்கலோடு ஒருங்குடன் உடீஇக் கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்னக

வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை