பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 185

படி உலர்ந்த, பெருஞ்செந்நெல்லின்-பெரிய செந். நெல்லினுடைய, தெரிகொள் அரிசி-கல்லும் பிறவும் நீக்கிப் பொறுக்கி எடுத்த அரிசியால் ஆக்கிய, திரள் நெடும் புழுக்கல்- திரண்ட நீண்ட சோறும், அருங்கடித் தீஞ்சுவை அமுதெர்டு பிறவும்-அரியகாவல் மிக்க இடத்தில் வைத்துக் காத்த இன்சுவை மிக்க அமிழ்தம் போன்ற உணவும் பிறவும் ஆகிய, விருப்புடை மரபின் காப்புடை அடிசில்-கண்டாரை விரும்பப்பண்ணும், கலங்களில் மூடி வைத்துக் காப்பாற்றிய உணவு வகைகளை, மீன்பூத்தன்ன வான் கலம் பரப்பி-விண் மீன்கள், இரவில் ஒளிவிட்டுக் காட்சி தருவதுபோல் வெள்ளிக் கலங்களைப் பரப்பி, மகமுறை மகமுறை நோக்கி-தாய் மகவைப் பார்க்குமாறுபோல உங்களைத் தாயன்பு பெறுக நோக்கி, முகன் அமர்ந்து-முகம் மகிழ்ச்சியால் மலர்ந்து, ஆணா விருப்பின் தான் நின்று ஊட்டி-குறையாத பேரன்போடு, தானே உடனிருந்

உங்களை உண்பித்து.

14-4 திரையன் அளித்த பரிசு

திரையன் அளிக்கும் விருத்தின் சிறப்பினை எடுத்

துரைத்த புலவர் அடுத்து, அவன் அளிக்கும் பரிசில் பெருமை பற்றி விளக்கத் தொடங்கினார். . . . . . . .

நல்ல உடை கிடைத்து, வயிறார் உணவும் கிடைக்கப் பெற்றவர்க்கு அடுத்த நாட்டம் நல்ல அணிகள் மீது செல்லும். மக்களின் இம் மன இயல்பு உணர்ந்தவன் திரையன். அதனால், பெரும்பாண உனக்கும் உன் உடன் வந்திருக்கும் பெண்டிர்க்கும் ஏற்புடைய அணிகளை அணிந்து விடுவன். பாண! உன் தலையில் அழகிய தாமரை மலர்ைச் குட்டுவன். என்ன தாமரை மலரா? வலைஞர் குடியிருப்பை அடுத்துள்ள குளங்களில் காணாத தாமரை மலரா? விரும்பி