பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

யிருந்தால் அங்கேயே ஒன்றைப் பறித்துச் சூடி வந்திருக்க மாட்டேனா? என்று எண்ணிக் கவலையுற வேண்டாம். நீ நினைக்கும் அத் தாமரை மலரில் வண்டுகள் மொய்க்கும்; அது தண்ணீரில் வளரும். ஆனால், திரையன் சூட்டும். தாமரை மலரில் வண்டுகள் மொய்க்கா: அது, செந்தழிலில் இட்டு உருக்கி அடித்து வடித்த பொன்னால் ஆனது. அழகிய அப் பொற்றாமரை மலரைக் கருத்து நீண்ட உன் தலை மயிரிடையேசூட்டி விட்டால், அக்காட்சி, கருமேகத்திடையே பேரொளிவீசிக் காட்சி தரும் முழுத் திங்கள் போல் தோன்றி, உன்னை அழகின் திருவுருவமாக மாற்றி விடும். -

உனக்கும், உன் போலும் ஆடவர்க்கும் அவ்வாறு பொற்றாமரை மலர் சூட்டும் அவன், உன் உடன் வரும் பெண்டிர்க்கு, அவருடைய அடர்ந்து நீண்ட கரிய மயிரை, அழகுற வாரிப் பின்னலிட்டு, அப் பின்னலிடையே, பொன்னரி மாலை என்னும் பொன்னணியைப் பூட்டி விடுவன். கருத்து, நீண்ட பின்னலிடையே, மின்னலிடும் - பொன்னரி மாலை கிடக்கும் காட்சி, கோடைக் காலத்து மாலைப்போதில், கடல் நீருண்டு கருத்து எழுந்து திரண்ட மேகம், கால் இறங்கிப் பெய்யத் தொடங்கும் பேர்து: அதனிடையே ஒளிவிடும் கொடி மின்னல் காட்சியை நினை வூட்டிக் கண்ணைப் பறிக்கும். - - -

இவ்வாறு உயர்ந்த அணிகளைச் சூட்டி, உங்களை ஒப்பனை செய்து முடித்ததும், நீங்கள் தன்னைக் காண காட்டிலும், மேட்டிலும், கானாற்றிலும் கால் கடுக்க நடந்து வந்துள்ளீர்கள்; இனியும் நடப்பது உங்களால் இயலாது என்பதை உணர்ந்து, உங்களுக்குச் சிறந்த ஊர்திகளை வழங்குவன். பொன் வேலைப்பாடு மிக்க. அழகிய நெடிய தேர் ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்துவன். , , , , . . .”,

அதில், குதிரை நூல் வல்லவர்களால், குற்றம் அற்றவை, குணங்களால் சிறந்தவ்ை எனப் பாராட்டப்