பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தொண்டை நாட்டு மலை மாண்பு

திரையன் அளிக்கும் பரிசில் பெரும் பெரும்பாணனும், அவன் சுற்றுமும் திரையன் பால் விடை கொண்டு, தேர் மீதும், குதிரைகள் மீதும் அமர்ந்து தம் ஊர் நோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அளர்கள் செல்லும் இன்பக் காட்சி யைக் கண்டு மகிழ்ச்சி பொங்கத் தன்னை மறந்து நிற்கும் திரையனைக் காணும் புலவர் உள்ளம், “இரவலர் வாழத் திரையன் வாழ்க! அவன் அப் பெரு நிலையில் வாழ, அவன் நாடு பல வளமும் பெற்றுவாழ்க!” என வாழ்த்தத் துடிக்கும். அதனால் அவன் நாட்டு வளத்தை, ஒரு நாள் இருந்து மறு நாள் அழிந்து விடாது முக் காலங்களிலும் தொடர்ந்து நிலை பெற வல்ல பொருள்களைக் கூறுங்கால், நிகழ் கால வினை முற்றால் கூறும் மரபு வழி நின்று, நிகழ் கால நிகழ்ச்சிகளாகப் பாராட்டத் தொடங்கி விட்டார்.

“இசையின் நுட்பம் அறியவும், இனிய இசையைத் தாளம் தவறாமல் எழுப்ப வல்லனவுமாகிய கின்னரப் பறவைகள் பாடித்திரிய, அவ்வின்னிசை கேட்கத் தெய்வங் களும் வந்து குழுமியிருக்க, சோலை மரங்களில், மயில் கூட்டம் மகிழ்ச்சி மிக்குத் தோகை விரித்து ஆட, மயில் ஆட்டம் கண்டு மகிழும் குரங்குகள் மரக்கிளைகளை ஆட்டி மலர்களை உதிர்க்க, உதிர்த்த மலர்க் குவியலை மந்திகள் வாரி, மரத்தடிகளைத் துப்பரவு செய்ய, அம் மரத்தடியில் மானும் புவியும், தம் பகை மறந்து இணைந்து படுத்து உறங்க, நாடு வாழ, முப் தீப் பேணி வளர்க்கும்