பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

இலைகளை உதிர்ந்துவிட்ட, பராஅரைப்பாதிரி - பருத்த அடிமரத்தையுடைய பாதிரி மரத்தின், வள்இதழ் மாமலர் - வளமான இதழ்களைக் கொண்ட பெரிய மலரை, வகுத்ததன் உள்ளகம் புரையும் - இரண்டாகப் பிளந்தால் அதன் உட்புறத்தை யொக்கும், ஊட்டுறு பச்சை - செந்நிறம் ஊட்டப்பெற்ற தோலில், பாரிஅரைக் கமுகின் - பருத்த அடியினையுடைய பாக்கு மரத்தின், பாளை.அம் பசும்பூ - பாளையாகிய அழகிய இளம் பூ. கருவுஇருந்த்ன்ன - விரியாமல் கருவாய் இருக்கும் காட்சிபோல், கண்கூடு செறிதுளை - நெருங்க இடப்பெற்ற துளைகள், உருக்கி அன்ன - உருக்கி, ஒன்றாக இணைத்தாற்போன்று. பொருத்துறு போர்வை. - வேறுபாடு தெரியாவாறு பொருத்தப் பெற்ற போர்வை.) - .

நல்லன ஆற்றுமுன் நல்லன அல்லனவற்றை அழிக்க வேண்டுவதன் இயல்பை உணர்த்தவே, வள்ளிதழ் மலர்களை மலர விடுவதன் முன்னர், பாதிரி பாசிலைகளை உதிர்த்து விடுவதைக் குறிப்பிட்டார் ஆசிரியர். இச்சிறப்பல்லது: அத்தொடரில் வேறு பொருள் காண இடமில்லையாகவும் “பாதிரி மரமாவது பாடலிமரம்; அது, இலையுதிர்ந்து நிற்கும் நிலையைக் கூறியது, இத்திரையன் காலத்தில் பாடலி அரசர் வலி குன்றியதனைக் குறிப்பால் உணர்த்தியதாம் என்று விளக்கம் காண முயன்றுள்ளார் ஒருவர்.

பாலாற்றங்கரைப் பல்வேல் திரையனுக்கும், கங்கைப் பேரியாற்றுப் பாடலி அரசர்க்கும், அக்காலை எவ்விதத் தொடர்பும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லையாதலின் அவ்வாறு தொடர்பு படுத்தி வலிந்து பொருள் கொள்வது. தேவையற்ற ஒன்று. .

போர்வையின் பண்பு நலம் கண்டு பாராட்டிய பாணன் பார்வை, பின்னர்ப் பேரியாழின் உறுப்புக்களை அடைவே