பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுர்ை

புகுந்தது. புகவே, அது வந்த திசைக்கள் தன் பார்வையைப் போக்கினான். ஆங்கே வறுமையின் நிலைக்களமாய் ஒரு பெருங் கூட்டம் காட்சி அளித்தது. ஒட்டிய வயிறும் உருக் குலைந்த உடலும் உடையவாய அவரெல்லாம் இப்பான னால் புரக்கத்தக்கவர். இவன் பெரும் பரிசில் பொருளால் உண்டு வாழ்பவர்; இவனுக்குப் பரிசில் கிடைக்காதாயின்: தாம் பசியால் துடிக்க வேண்டியவர். ஆக, தன்னால் தாங்க வேண்டிய அவர்கள் தளர்ச்சி கண்டே இவன் மனம் கலங்கு கின்றான். அவ்வுள்ளக் கலக்கமே இவன் உடல் நலத்தை ‘நசுக்கிவிட்டது, .

அம்மட்டோ பாணன் பறையன் துடியண் கடம்பன் என்று இந்நான்கல்லது குடியுமில்லை’ எனப் போற்றத் தக்க பழம் பெரும் சிறப்பு வாய்ந்ததுதான் நான் பிறந்த பாண்குடி. ஆனால், அக்குடிப் பெருமையால், என் குடி வந்தாரின் வறுமைத் துயரைப் போக்க முடியவில்லையே. பேரியாழ்வல்லவன்தான் யான். ஆனால் நான் பெற்றிருக்கும் இசைக்கலை அறிவால், இவர்கள் வறுமையைப் போக்க வழியில்லையே, வாடும் சுற்றத்தின் வயிற்றுப் பசியைப் போக்க மாட்டா எனக்குக் குடிப்புகழ், குறை காணலாகா இசைக்கலை அறிவு இவையும் ஒரு கேடா?” எனப் பிறந்த குடியையும் பெற்ற கல்வியையும் பழிக்கத் தலைப்பட்டு விட்டது இவன் வாய். . . . .

அம்மட்டோ பாணன் வாய், கற்ற கல்வியையும் பிறந்த குடியையும் பழிக்கிறது என்றால், இவன் உள்ளம் இந்த உலகையே பழிக்குமளவு துணிந்திருந்தது. பார்த்தவர் பசியையும் போக்குமளவு பரந்து கிடக்கும் கடல் நீரால் சூழ்ந்ததுதான் இவ்வுலகம் இருந்தும் என்ன பயன்? அக் கடல் நீர் நா வேட்கையைத் தணிக்க மாட்டாமை ஒருபுறம் கிடக்கட்டும். உடல் மாசைப் போக்கவாவது அது ஒருப் .படுமோ? ஒரு சிறிதும் படாது. பெரு நீர்நிலைதான், ஆனால்