பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கோவிந்தனார் r 39

குடியில் தோன்றியவனே என்றாலும், இவனையும் அவரொப்ப மதித்து விடுதல் கூடாது. எல்லாச் சங்குகளும் கடல் நீரில்தான் பிறக்கின்றன. அதனாலேயே அவை யனைத்தும் ஒரு தன்மை ஆகிவிடா. அவற்றுள் வலம்புரிச் சங்கு ஏனைய சங்குகளைக் காட்டிலும் இறப்ப உயர்ந்தது என்பதை உலகம் அறியும். அதைப் போலவே மூவேந்தர் குடியில் தோன்றினானெனும் திரையன் அம்மூவேந்தர் குடிவந்த வேந்தர் அனைவரினும் சாலச் சிறந்தவனாவான்’ என்று கூறி அக்குறைபாட்டுக் குறிப்பையும் போக்கினான் பாணன். -

“வினைக்கண் வேறாகும் மாந்தர்களைக் கொண்ட மாண்புடையதன்றோ இம்மண்ணுலகம்! ஆகவே, குடிப் பிறந்தார் அனைவரும் குணமுடையராதலும் இல்லை. குடிப்பிறந்தாருள்ளும் வடுப்புரியும் வாழ்வுடையார் வாழ் கின்றனரே இவ்வையகத்தில்! உலகியல் இதுவாகவே திரையன் குடிப்பெருமையுடையான் என்பது ஒன்றை மட்டுமே கொண்டு அவனை நல்லவன் என நினைத்துவிடுதல் கூடாதே என்று எண்ணவும் தோன்றுமாதலின், அவ்வெண் ணத்தையும் மாற்றுவான் விரும்பி, பெரும்பான திரையன் பிறந்த குடியால் மட்டும் பெருமையுடையவன் அல்லன்; அவன், அரசர்க்கு ஆகாதன என அறநூல்கள் விலக்கிய அனைத்தையும் அறவே தான் கடிந்து வாழ்வதோடு தன் ஆட்சிக் கீழ் வரும் மக்கள் பாலும் அறமல்லாதன நிகழா வாறு நீக்கிய நல்லோனாவான்’ என்று கூறினான். அது. கேட்டும் பெரும்பாணன் உள்ளம் நிறைவெய்தியதாகத் தோன்றவில்லை. நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது செய்தல் ஒம்புமின்’ என்பதே உலகோர்க்கு, ஆன்றோர் உரைத்த அறம். நல்லது செய்ய ஆற்றாத ஒருவனுக்கு, உன்னால் நல்லது செய்ய இயலாது. போயினும் அல்லது செய்வதையாவது கைவிடுக” எனக் கூறுவதே அவ்வறவுரை யின் கருப்பொருளாமாதலின் திரையன் அல்லது செய்திலன்