பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கோவிந்தனார் 53

ஒத்த பழக்கமும், வயதும், வலிவும் உடையவிாய் அமைதல் இயலாது. அதனால் சில, ஒழுங்கை விட்டு அலைக்கழித்து ஈர்த்துச் செல்லவும் கூடும். வண்டி போகும் வழி, அகன்ற பெருவழி அன்று, ஆதலின், ஒன்றன்பின் ஒன்று என்ற ஒழுங்கு மீறின், வண்டிகளின் போக்கு தடையுறும். அதனால், வண்டிகளின் இருபுறமும் சிலர் நடந்து சென்ற வாறே, மாடுகள் ஒழுங்கு மீறிச் செல்லாவாறு காத்துச் செல்லவும் வேண்டும். மேலும், பெரும்பாரம் ஈர்க்க மாட்டாது சில காளைகள் படுத்துவிடுதலும் உண்டு. அந் நிலையில் அக்காளைகளை அகற்றி விட்டு, வேறு வலிய காளைகளைப் பூட்டி விடுவர். அதற்காக, வண்டியில் பூட்டும் மாடுகளோடு, சில மாடுகளை வறிதே கொண்டு செல்லவும் வேண்டும். -

நெடுவழி ஒடி ஒடித் தேய்ந்து போவதால், சிலசமயம் அச்சு முறிந்து போதலும் உண்டு. அவ்வாறு முறிந்து போகும் இடங்களில், வண்டியில் உள்ள மூட்டைகளைக் கீழே இறக்கி வைத்து விட்டு, முறிந்த அச்சுக்குப் பதிலாக, இது போல் நேர்ந்தவழி உதவுவதற்கென்றே உடன் கொண்டு. செல்லும் சேம அச்சு எனப்படும் புது அச்சை மாட்டி, மீண்டும் மூட்டைகளை ஏற்றிக் கொள்ளுதல் வேண்டும். இந்தப் பணிகளை எல்லாம் வண்டிக்குரிய உப்பு வணிகன் ஒருவனே தணித்துச் செய்துவிடல் இயலாது. அதனால் வண்டிகளை இடையூறு இன்றிக் காத்து ஒட்டிச் செல்லவல்ல சிலர், உப்பு வணிகர்க்குத் தேவைப் பட்டனர். அதனால், அப்பணிக்கு ஏற்ற உடல்கட்டு உடையவராகச் சிலரைத் தேர்ந்து, செல்லுமிடந்தோறும் உடன் அழைத்துச் செல்வர். முறுக்குண்ட உடலும், வலிவு மிக்கு இறுகிய தோளும் அமையப்பெற்று, அன்றைய ஆணழகர்களாகக் காட்சி தரும் அவர்கள், கொளுத்தும் கோடை வெய்யிலால், தம் தலைகள் காய்ந்து கொதிப்பேறி விடாதபடி, இளம்தளிருக்கிடையே கொத்துக் கொத்தாகப்