பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெரும்பாணாற்றுப்படை விளக்கவு ரை

பூத்து மணக்கும் வேப்பிலை முதலாம் பசுந்தழைகளையும், மணம் வீசும் வேறு பல மலர்களையும் கலந்து கட்டிய மாலைண்யத் தம் தலையிலே சுற்றிக் கொண்டு, உருண்டு. திரண்ட நுகத்தடியில் உள்ள துளைகளில் நுழைத்து, மாடு

களை ஒழுங்காகக் கட்டிய கயிறுகளைக் கையில் பற்றிக்

கொண்டு, வண்டிகளின் இருபுறங்களிலும் நடந்தவாறே, ஒழுங்கு குலையாமல் காத்து வண்டிகளை ஒட்டிச்

செல்வர். - - * ... --

வண்டிகளை, ஊறு நேராவாறு ஒட்டிச் செல்லும் பொறுப்பு அவர்களுடையத்ாகவே, உப்பு வணிகர், வண்டி யோட்டும் கவலையற்று, உப்புவிற்கும் ஒரே நோக்குடைய வராகி. நெல்லும் ஒப்பும் நேரே என உப்புக்கு மாறும் பொருளும், அதன் அளவு கூறி, உப்போ உப்பு’ என உரக்கக் குரல் கொடுத்து வாணிகம் புரிந்தவாறே செல்வர். இவ்வாறு, வாணிகம் மேற்கொண்டு ஊர்ஊராகச் செல்லும் உமணர்களின் வண்டித் தொடர் செல்வதால், உடன்வரும் முடலையாக்கை முழுவலிமாக்கள், உப்பு வணிகர்க்கு மட்டும் அல்லாமல், அப்பெருவழியில் அனைவர்க்கும் இரவில் அல்லாமல் பகலிலும் நல்ல காவலாய் நிற்பர்.

கோட்டிணர் வேம்பின் ஏட்டிலை மிடைந்த் படலைக்கண்ணி, பரேர் ஏறுழ்த் திணிதோள் முடலையாக்கை முழுவலி மாக்கள் . . சிறுதுளைக்கொடுநுகம் நெறிபட கிரைத்த பெருங்கயிற்று ஒழுகை மருங்கில் காப்பச் சில்பத உணவின் கொள்ளைசாற்றிப் பல்லெருத்து உமணர் பதிபோகு நெடுநெறி எல்லிடைக் கழியுநர்க்கு ஏமமாக.

(கோட்டினர் வேம்பின்-கொம்புகளில் கொத்துக் கொத்தாகத் துளிர்விட்டிருக்கும் வேப்ப மரத்தின்