பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுர்ை

காட்டுப் பன்றிகள் திரியும் காலம் இராக்காலம்; மேலும் அதன் நிறமே கறுப்பு, அதனால் உடலமைப்பைக் IT முடியவில்லை, என்றாலும், கார் இருள் இடையேயும். கறுப்பு நிறத்து ஊடேயும், காண்டார் கண்களுக்கு, அதன் வாயின் இருபுறங்களிலும் முளைத்து வெளிப்பட்டுத் தோன்றும் கொம்புகள் தெற்றெனப் புலப்பட்டுவிடும், வளைந்து தூய வெண்ணிறம் வாய்ந்த அக்கொம்புகள் வடிவாலும் நிறத்தாலும் அகத்தில் பூவை-நினைவூட்ட அவ்வகத்தி இலைகள், தம்மொத்த வடிவுடைய இலைகளைக் கொண்டதும், பாலையின் புறத்திணை உரிப்பொருளாகிய வெற்றிக்கு உரியதாகிய வாகை எனும் பெயரே தாங்கி அப்பாலை நிலத்தில் வளர்ந்து நிற்பதுமாகிய வாகை மரத்தை நினைவூட்ட, அந்நினைவு ஆட்டத்தில் சிறிதே மiபங்கியபின்னர் கானவர் காட்டுப் பன்றியை வேட்டை யாடும் விதத்தை விளிக்கத் தலைப்பட்டார். - -

காட்டுப் பன்றிகள் உள்ள இடத்தை அறிந்து அடை வதும் அரிது. அவற்றை நீேர்நின்று வளைத்துப் பிடிப்பதும் இயலாது. அதனால், வாழிடம் விட்டு, அவை தாமாகவே வெளிப்பட்டு வருவதை எதிர்நோக்கி இருப்பர், காட்டில், வ்ேறு எங்கும் தண்ணிர் இல்லாமையால் தம் நீர்வேட் கையைப் போக்கிக்கொள்ள, அவையும், கானவர், அகழ்ந்து. வைத்திருக்கும் குழிகளுக்கே வருதல் வேண்டும். இதை அறிந்து வைத்திருக்கும் கானவர், அத்தகைய குழிகளைச் சூழவும் வேறு குழிகளை அகழ்ந்து, அவை குழிகள் எனத் தோன்றாவாறு, மேற்புறத்தைத் தழைகளால் மறைத்து: விட்டு, அக்குழிகளின் அகத்தே ஒரு புறமாக ஒடுங்கிக் கிடப்பர். நீர் உண்ணவரும் பன்றி, அக்குழிகள் மீதுஅறியாது கால்வைத்ததும், நிலைகுலைந்து, அதன் அகத்தே வீழ்ந்து விடும். உடனே, அங்கே ஒடுங்கியிருக்கும் கானவர் அப்

பன்றியை அகப்படுத்திக்கொள்வர்.