பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*4 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

தாங்கி நிற்கும் தாமரைத்தண்டு, அத்தண்டைக் கைப்பற்றுவார் கைகளைக் குத்தும் சிறுசிறு முட்கள் ஆகியவற்றை எண்ணி மகிழும் இன்ப உணர்வோடு, மீண்டும் முயலை நோக்கியபோது அவ்வின்ப உணர்வுகளுக் கெல்லாம் நிலைக்களமாகக் கிடக்கும் . அம்முயலின்பால் அன்பு பாராட்டுவதற்கு மாறாக, அம்முயலைக் கொன்று தின்னும் கானவர் செயல்கண்டு கொதிப்பேறி, அவரைக் கடுங்கண் மறவர் என வசைபாடித் தீர்த்தாலும், கொன்ற முயலைத்தான் மட்டும் தனித்து இருந்து தின்ன எண்ணாது, கானவர் அனைவரையும் அழைத்து, அவர்க்கும் அளித்து உண்ணும் அவர் செயலை, அவர் உள்ளம் ஓரளவு பர்ராட்டவும் செய்தது. குறுங்காட்டுவழியின் இயல்பு இதுவாகும். - * > *

‘மான் அடி.பொறித்த மயங்கு அதர் மருங்கின்

வான் மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த அகழ்சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கிப், புகழா வாகைப் பூவின் அன்ன

வளைமருப்பு ஏனம் வரவு பார்த்து இருக்கும் அரைநாள் வேட்டம் அழுங்கின்பகல் நாள் பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கித் தொகுவாய் வேலித் தொடர் வலை மாட்டி முள்அரைத் தாமரைப் புல் இதழ் புரையும் நெடும்செவிக் குறுமுயல் போக்கு அறவளை இக் கடுங்கல் கானவர் கடறுகூட்டு உண்ணும் அரும் சுரம் இறந்த அம்பர்’ . . . - -

! - - (106–117).

(மான் அடி பொறித்த-மான்களின் அடிச்சுவடுகள் அழுந்திக் கிடக்கும்; மயங்கு அதர் மருங்கின்-வழியோ, அல்லவோ என மயங்குதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில் வான்மடி பொழுதில்-மழை ப்ெப்யாமல்