பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பெயர் முருகன் 8

அவன் தெய்வத் தன்மையிலே சிறந்தவன். தெய்வத் தன்மையுடையவர்களேத் தேவர் என்பர். அவருக்குள்ளே பெரிய தேவன் சிவபெருமான். அதனல் அப்பெருமானுக்கு மகாதேவன் என்ற திருநாமம் வந்தது. அந்தப் பெருமானுக் கும் நாதகை, தெய்வமாக, முருகன் இருக்கிருன். சரவண தகப்பன்சாமி என்று அருணகிரி நாதர் பாடுவார்.

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே

என்பது திருப்புகழ். சுப்பிரமணியன் என்ற திரு நாமமும் பிரமத்தின் இயல்புடையவர்களுள் உயர்ந்தவன் என்ப தையே உணர்த்தும். சாமிநாதனுகிய முருகன், கண்கண்ட தெய்வமாகிய செவ்வேள், தெய்வத் தன்மையிலே சிறந்த வகை விளங்குகிருன் என்பது அவற்ருல் விளங்கும்,

முருகன் என்றும் இளமையுடையவன். பாலன் என்ற திருநாமம் உடையவன். х

என்றும் இளையாய்

என்று பழம் புலவரும்,

என்றும் அழியாத இளமைக்கார என்று அருணகிரிநாதரும் பாடுகின்றனர். குழந்தை ೩೩ வேலன், குழந்தை என்னும் வழக்காறுகளும் இக்கருத் தைத் தெளிவிக்கும். . . . .

முருகன் அழகுடையவன் என்பதைப் பல அன்பர்கள் பலவாறு கூறியிருக்கின்றனர். குமாரன் என்ற திருநாமமே அவனுடைய பேரழகைக் குறிக்கும். மாரனைக் குற்சிதம் ,

செய்யும் அழகுடையான் என்று அதற்கு அறிஞர்கள்