பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டு முருகன் 103

வைப் போன்ற அழகுடைய பெண் யாராவது கிடைத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்வாரென்றும், அப்படி ஒரு பெண்ணேப் பார்க்கத் தான் தீர்த்தக்கரைகளிலும் மரத்தடி யிலும் அவர் எழுந்தருளி யிருக்கிருரென்றும் நம் நாட்டில் ஒரு கதை வழங்குகிறது. இங்கேயோ கார்த்திகேயர் பிரம்மச்சாரி. அவருக்கு இன்னும் கல்யாணமே ஆக வில்லையாம். யாராவது பெண் அவரைத் தரிசனம் செய் தால் உடனே அவளே அவர் பற்றிக் கொள்வாராம். ஆகை யில்ை கார்த்திகேயரைப் பெண்கள் வந்து தரிசிப்பதே இல்லை' என்று நண்பர் சொன்னர்.

முருகனையா பெண்கள் தரிசிப்பதில்லை?” என்று வியப்புடன் கேட்டேன். . . . . "ஆம், இங்கே மாத்திரம் அல்ல; வடநாட்டில் பல இடங்களில் அப்படித்தான்' என்று அவர் சொன்னர்.

அப்போது என் கற்பனை வேலை செய்தது. தமிழ் நாட்டு வள்ளிநாயகியைக் கண்ட கண்களால் இந்த நாட்டு மடந்தையரைப் பார்க்க விரும்ப வில்லையோ?” என்ற வினாவை என் உள்ளம் எழுப்பியது. இக் கருத்தை அமைத்து ஒரு பாடல் பாடினேன்.

புண்ணியமா நகர்தன்னில் ஓங்கும் குன்றில் பொலிகின்ற தேவதே வேசன் கோயில் நண்ணியொளிர் ஆறுமுகத் தேவே மஞ்ஞை

நற்பரிமீ தமர்ந்தருளும் கார்த்தி கேயா பெண்ணினத்தில் தமிழ்நாட்டு வள்ளி தன்னைப்

பெட்புற்றுப் பார்த்ததிரு விழியால் ஈங்கே அண்ணுமடந் தையர்தம்மைப் பாரே னென்னும் அதேைலா அவர்பாராத் தெய்வம் ஆளுய்?. என்ன காரணத்தால் பெண்கள் முருகனைத் தரிசிப்ப தில்லையோ, யான் அறியேன். ஆனல் நான் இந்தப்