பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பெரும் பெயர் முருகன்

முகம் கொண்ட முருகைேடு தொடர்புடைய பொருள்கள் பலவற்றை ஆருக கினேப்பதில் இன்பம் கண்டனர் அன்பர்கள். நக்கீரர் தாம் பாடிய திருமுருகாற்றுப்படை யில் முருகன் உறையும் இடங்கள் இவை என்று சுட்டும் போது ஆறு இடங்களைக் கூறுகிருர். அவர் அப்படிக் கூறியது முதலே ஆறு படைவீடுகள் என்ற வரையறை வழக்கில் வந்தது. .

ஆறு திருப்பதிகண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தைகுடி கொண்டோனே : என்று குமரகுருபர முனிவர் ஆறு படைவீடுகளை ஆறு திருப்பதி என்று குறிக்கிருர்: -

சகல முதலாகிய அறுபதி நிலைமேவிய

தடமயில் தனிலேறிய பெருமாளே, ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே என்று அருணகிரிநாதர் திருப்புகழில் ஆறு திருப்பதி என்றே படைவீடுகளைக் குறிக்கின்றர்.

கந்தபுராணத்தில் ஆறு படைவீடுகளில் ஒவ்வொன். றுக்கும் ஒவ்வொரு துதியைக் கச்சியப்ப சிவாசாரியார் அமைத்திருக்கிருர். -

திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன் குடி, திருவேரகம், குன்றுதோருடல், பழமுதிர் சோலை. என்னும் ஆறும் ஆறு படை வீடுகளாகும். அந்த ஆறில் ஐந்தாவதாகிய குன்று தோருடல் என்பது எல்லா மலைகளே யும் குறிக்கும். குறிஞ்சி கிலத்துக்குக் கடவுளாகிய முருகவேள் எல்லா மலைகளிலும் எழுந்தருளியிருக்கிருன். அந்த மலைகள் எல்லாவற்றையும் ஒன்ருக வைத்துக்