பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 109

குன்றுதோருடல் என்னும் தொகைத் தலமாகக் குறிப் பிடுவது மரபு. - ,

குன்றுதோ ருடலும் நின்றதன் பண்பே . என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொல்கிரு.ர்.

நக்கீரர் வருணனை -

ஆறு படைவீடுகளுள் முதலாவதாகிய திருப்பரங் குன்றம் மதுரைக்கு அருகில் உள்ளது. பரன் குன்றம் என்பது பரங்குன்றம் என்று ஆயிற்று. சிவபெருமான் திருக்கோயிலும் அங்கே உண்டு. தேவாரம் பெற்ற தலம் அது. . . . திருப்பரங்குன்றத்தில் முருகவேள் தேவயானையைத் திருமணம் செய்துகொண்டருளினர். அக்குன்றம் பாண்டி யர்களின் தலைநகராகிய மதுரையை அடுத்து விளங்கு வதால் பழங்கால முதற்கொண்டே சிறப்பை உடையதாக இருந்தது. நக்கீரர் அதனேக் குன்று என்றே குறிக்கிருர்.

மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந்து உறைதலும் உரியன் என்பது திருமுருகாற்றுப்படை.

மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருக்கிறது. மலையின் அடிவாரத்தை அடுத்து வயல்கள் உள்ளன. கில

. . . . . ளியிருக்கிருன் ருக வைத்து