பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 10 பெரும் பெயர் முருகன்

வளத்தைக் காட்டும் கரிய சேறு நிரம்பிய வயல்கள் அவை, அந்த அகன்ற வயல்களில் நீர்தேங்கிய இடங்களில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன. முள்ளேத் தாளிலே யுடைய தாமரைக் கொடிகள் படர்ந்திருக்கின்றன. தாமரை மலரில் உள்ள தேனுக்கும் பூந்தாதுக்கும் ஆசைப்பட்ட வண்டுகள் பகல் நேரத்தில் அம் மலர்களிலே வந்து ஊது கின்றன. அப்பால் மாலை வரவே தாமரை மலர்கள் இதழ்க் கதவை அடைத்து விடுகின்றன. மெத்தென்ற அகவிதழ் களையுடைய அந்த மலருக்குள்ளே சுகமாகத் தூங்கிப் போகின்றன. வண்டுகள். விடியற்காலையில் அம்மலர்கள் சற்று நெகிழவே வண்டுகள் துயில் எழுகின்றன. உடனே அருகில் தேன்கமழ்கின்ற நெய்தல் மலரிலே சென்று தாது ஊதி அதில் உள்ள தேனேக் குடிக்கின்றன. பிறகு கதிர வன் உதயமாகின்ருன். அப்போது திருப்பரங்குன்றத்தின் சாரலேக் காண மேலே பறந்து செல்கின்றன. அங்குள்ள கனேகளில் பல மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அம் மலர் களிலே சென்று தேனே உண்டு ரீங்காரம் செய்கின்றன. இவ்வாறு வண்டுகள் உறையுளும் உணவும் பெற்று இன்ப மாக வாழும் இடம் திருப்பரங்குன்றம். வயலும் பொய்கை யும் சூழ்ந்த இடத்தில் திருப்பரங்குன்றம் இருப்பதை நக்கீரர் இந்த வருணனையால் தெளிய வைக்கிருர்.

பரிபாடலில் உள்ள செய்திகள்

மதுரை மா நகரிலிருந்து திருவிழாக் காலங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் திருப்பரங்குன்றத்திற்குச் சென் றனர். வழிநெடுகச் சோலைகள் இருந்தன. மலையில் மரங் கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இவற்றையும் மலைக் காட்சியையும் மதுரை நகரத்தார் அங்கே வந்து செய்யும்