பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பெரும் பெயர் முருகன்

அவனத் தொடர்ந்து வருகிருன் துவாதச ஆதித்தர்களும், தேவ வைத்தியர்களாகிய அசுவினி தேவர் இருவரும், அட்டவசுக்களும், ஏகாதச ருத்திரர்களும், திக்குப் பாலகர் களும் ஆகிய அமரர்கள் அனைவரும் வருகின்றனர். தேவர் கள் வரங் கேட்டால் நாமும் வரங் கேட்கலாமென்று அசுரர் களும் வருகிருர்கள். வேதத்தை முழக்கும் விழுத்தவ முனிவர் வருகின்றனர். இவ்வளவு பேர்களேயும் ஒருங்கே பார்க்கும் இடம் எது?, சிவபிரான் வீற்றிருக்கும் இமயமலை ஒன்றிலேதான் பார்க்க முடியும். பரனது மலேயாகிய அங்கே பார்ப்பது போலவே இந்தப் பரங்குன்றிலும் காணலாம். ஆகவே இமயக்குன்றத்தை ஒத்தது திருப் பரங்குன்றம். -

இமயச் சாரலில் சரவணப் பூம்பொய்கையில் முருகன் தோன்றின்ை. அந்தப் பொய்கையைப்போல இங்கும் அருவி நீரால் நிரம்பியிருக்கும் சுனே இருக்கிறது. இமயத் தில் முருகனது யானே முழக்கம் கேட்கும்; இங்கே கேட்கும் மேக முழக்கம் அதைப் போல இருக்கிறது.

மதுரையிலே சில வீடுகளில் கல்யாணம் நடக்கிறது. அதில் மண முரசம் ஒலிக்கிறது. அந்த ஒலி திருப்பரங் குன்றத்தில் சிலையோடுகிறது. மதுரையிலிருந்து திருப் பரங்குன்றத்துக்கு வரும் வழியில் மணல் பரந்திருக்கிறது. விழாக்காலமாகையால் அடியவர் பலர் திருப்பரங்குன் றத்தை நோக்கி வருகின்றனர். வருகின்றவர்கள் வெறுங் கையோடு வரவில்லே. முருகனது பூசைக்கு உரியவற்றை யும், காணிக்கைகளேயும் ஏந்தி வருகின்றனர். வெவ்வேறு விதமான சந்தனத்தைச் சிலர் கொண்டு வருகின்றனர், காற்று வீசினல் அணேயாத நந்தா விளக்குக்கு வேண்டிய பொருள்களைச் சிலர் கொணர்கின்றனர். மணம் பெற்ற மலர்களைச் சிலர் ஏந்தி வருகின்றனர். முழவத்தைக் கொண்டு வருகின்றனர் சிலர். மணியும் கயிறும் மயிலும்