பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் - 115

அங்குசமும் யானையும் பிற காணிக்கைப் பொருள்களும் சிலர் எடுத்து வருகின்றனர்.

வந்து முருகனே வழிபட்டு வேண்டிக் கொள்கின்றனர் மக்கள். மணமாகாத பெண் ஒருத்தி கட்டழகுக் காளே ஒருவனிடம் காதல் கொண்டாள். அவனைச் சந்திக்க முடி யாமல் தவித்தாள். அதே கினேவாக இருந்தமையால் ஒரு நாள் இரவில் ஒரு கனவு கண்டாள். வையையில் புதிய வெள்ளம் வந்ததாகவும், அப்போது ஊரெல்லாம் சென்று புனல் விளையாட்டு கிகழ்த்தியதாகவும், அங்கே தன் காத லனச் சந்தித்ததாகவும் கனவு கண்டாள். அவள் இப் போது திருப்பரங்குன்றத்திற்கு வந்திருக்கிருள். முருக னிடத்தில் அவள் பிரார்த்தனே செய்து கொள்கிருள்; 'கனவிலே நான் கண்டேனே, அது மெய்யாக வேண்டும். அது கனவிலே கடக்க வேண்டுமானுல் முதலில் வையை யில் வெள்ளம் வரவேண்டும். ஆகையால், முருகா வையையில் புதுப்புனல் வரும்படி அருள் புரிவாயாக!” என்று வேண்டிக் கொள்கிருள். - . . .

வேறு சில மகளிர் மணமாகிச் சில காலமாகியும் குழந்தையின்றி வருந்தினர். அவர்கள் முருகனே வேண் டிக்கொண்டு, கருவுற்ருல் இன்ன இன்ன பொருள்களைக் காணிக்கையாக அளிப்போம் என்று பிரார்த்தனே செய் கிரு.ர்கள். . -

ஒரு பெண்மணிக்கு மணம் ஆகிவிட்டது. கணவனோடு வாழ்ந்து வந்தாள். தானே பொருளிட்டி அதைக் கொண்டு தர்மம் செய்யவேண்டும் என்ற கொள்கையை உடைய அவன், வியாபாரத்தால் பொருளிட்டும்பொருட்டு வெளி யூர் சென்றிருந்தான். அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்தால் அவன் உடனே ஊருக்கு வந்துவிடுவான். அவன் விரைவிலே வந்து சேர வேண்டுமென்ற ஆவல் உள்ள அவன் மனைவி முருகனிடம் வேண்டிக்கொள்கிருள்: