பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 117

கின்றனர். திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்துக்கு வந்து முருகவேளேப் பாடுகிருர்கள். ஆலாபனம் செய்து இசை யோடும் தாளத்தோடும் பாடுகிருர்கள். அவர்களுக்கு அப்போது உண்டாகும் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை. தேவலோகத்தில் மிக்க இன்பம் பெறலாம்' என்று யாராவது அவர்களிடம் சொன்னல், அது வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களாம். தேவர்கள் வாழும் சொர்க்கலோக இன்பத்தை விரும்புகிறவர் யார்?’ என்று கேட்கிருர் புலவர். -

மாலை மாலை அடியுறை இயைநர் * , . . . மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்? திருப்பரங்குன்றத்தில் கிகழ்வனவற்றைப் புலவர் விரி வாகச் சொல்கிருர்,

ஒரு பக்கம் பாணர்கள் யாழை மீட்டிப் பாடுகிருர்கள். மற்ருெரு புறம் வண்டின் ரீங்காரம் கேட்கிறது. ஒரு பக்கம் புல்லாங்குழலின் இன்னிசை எழுகிறது. வேருெரு புறத் தில் தும்பி யென்னும் உயர்ந்த சாதி வண்டுகள் முரல்கின் றன. ஒரு சார் முழவு முழங்குகிறது. மற்ருெருசார் அருவி யின் இசை ஒலிக்கிறது: ஒரு பக்கம் விறலியர் அசைந்து ஆடுகின்றனர். மற்ருெரு பக்கம் பூங்கொடி நுடங்குகிறது. தாளம் போட்டுப் பாடுகிறர் பலர். மயில் ஆடுகிறது. இப்படிச் செயற்கை நிகழ்ச்சிகளும் இயற்கை நிகழ்ச்சி களும் எதிரெதிர் எழுகின்றன. -

வேறு புலவர்களும் திருப்பரங்குன்றத்தைச் சிறப்பித் துப் பாடியிருக்கின்றனர். .

இதுகாறும் கூறிய செய்திகளைக் கொண்டு பார்த் தால், திருப்பரங்குன்றம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு