பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழம் பழனி 123

இருப்பது இயற்கை. முருகன் அடியார்களுக்கு வேல், மயில் என்ற இரண்டினிடத்திலும் அளவற்ற அன்பு உண்டு. வேலும் மயிலும் என்பதையே மந்திரம் போல உச்சரித்து இன்புறுவார் பலர்.

மலேச்சாரலில் வானம் சிறு துளி துளிப்பதைக் கண்டு தோகை விரித்து ஆடியது மயில். அதன் அழகிய தோற்றத்திலே ஈடுபட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் பேகன். முருகனுக்கு ஊர்தியாக விளங்கும் மயிலினது நடனம் அவன் உள்ளத்தைக் கொள்ளே கொண்டது. மயில் தோகையை விரித்து கிற்கும் போது, அடிக்கடி சலார் சலார் என்ற ஒலி தோன்றச் சிலிர்க்கும். இது அந்தப் பறவைக்கு இயல்பு. பேகனும் அந்தச் சிலிர்ப்பைக் கண்டான். அதைக் கண்டு குளிரினல் நடுங்குகிறதோ என்ற ஐயம் அவனுக்கு உண்டாயிற்று. மழைத் துளி துளிப்பதல்ை அந்த எண்ணம் உண்டாயிற்று. ஆண்டவனது வாகனமாக உள்ள மயில் நடுங்குவது தகுமோ என்று அவன் உள்ளம் எண்ணியது. கருணையும் முருகனது அன்பும் இடம் பெற்ற உள்ளம் அது. உடனே தன்மேல் போர்த்திருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து மயிலுக்குப் போர்த்து விட்டான். இந்த மயில் இதை உடுத்துக் கொள்ளுமா? போர்த்துக் கொள்ளுமா? என்று அவன் யோசிக்கவில்லை. அது அதனைப் பயன் படுத்திக் கொள்ளாது என்பதை அவன் பிறகு உணர்ந் திருப்பான். ஆயினும் அந்தக் கணத்திலே பக்தி பரவசத் தால் போர்வையை அளித்தான். -

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன்

என்று அவனைப் பரணர் என்ற புலவர் பாராட்டுகிறர்.