பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பெரும் பெயர் முருகன்

அவனுடைய மலே தனி மலே; மலேத்தொடர் அன்று; சிறு குன்றும் அன்று. ஆகவே அதைப் பெருங்கல் என்ருர். அதன் உச்சியிலே தெய்வம் கின்று காக்கிறது என்றும் சொல்கிருர், அருந்திறற் கடவுள் என்று அக்கடவுளேப் பாராட்டுகிரு.ர்.

சிறுபாணுற்றுப்படையில், “அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன், பெருங்கல் நாடன் பேகனும்’ என்று பேகன் பாராட்டப் பெறுகிருன்.

'அரிய திறல்பெற்ற தெய்வத்தை உடைய ஆவியர் பெருமகன்' என்று அவனுடைய குலதெய்வம் குறிக் கப்பெறுகிறது. அருந்திறற் கடவுளும் அருந்திறல் அணங்கும் ஒருவரே.

அந்தக் கடவுள் யார்? மலைமேல் இருக்கும் கடவுள், ஆவியர் குல தெய்வம் ஆகிய முருகன்தான். பெருங் கல்லாகிய பொதினியில் கின்று அந்த மலையையும், அது உள்ள வைகாவூர் நாட்டையும், அதனையுடைய ஆவியர் குலத்தையும் காப்பாற்றி அருள் செய்பவன் முருகன் என்று அறிந்துகொண்டோம். ஆகவே பொதினியாண்ட வனகிய பழனியாண்டவன் புதியவன் அல்லன், பழைய வனே என்றுதானே முடிவு கட்டவேண்டும்?

கபிலர் என்னும் புலவர் பேகனை ஒரு பாட்டில் (புறநானூறு, 143) பாராட்டுகிருர். அவனையும் அவன் மலையையும் பாடினதாகச் சொல்கிரு.ர். 'கின்னும் நின் மலேயும் பாட' என்று கூறுகிருர். அவன் மலையாகிய பொதினியைப் பாடுவதில் புலவருக்கு ஆனந்தம். அந்த

  • அணங்கென்பது ஆண் தெய்வங்களேயும் குறிக்க வருவ துண்டு. சினேச்சுறவின் கோடுகட்டு, மனேச்சேர்த்திய வல் லணங்கினன்' என்பதில் வருணனை அணங்கென்று புலவர் சொல்கிரு.ர்.