பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழம் பழனி l 27

மலையில் நிகழும் அதிசயத்தை அந்தப் பாட்டிலே சொல்கிரு.ர்.

குறிஞ்சி கிலத் தெய்வம் முருகன். அந்த கிலத்து மக்கள் குறவர். பேகனது நாட்டிலுள்ள குறவர், மழை இல்லையெனில் உடனே பொதினி ஆண்டவனுக்குப் பூசை போடுவார்கள். மலர் தூவி வணங்குவார்கள். ஆண்டவன் கருணையால் மழை பொழியும்; அதிகமாகப் பொழியும், அளவுக்கு மிஞ்சி மழை பொழிந்தாலும் கெடுதல்தானே? ஆகவே முன்பு மழைவேண்டுமென்று பூசைபோட்ட அந்தக் குறவர் மாக்களே இப்போது, மழை கிற்கட்டும் என்று பொதினி ஆண்டவனைப் போற்றி வழி படுகிருர்கள். மழை நின்று விட்டது. அதனல் மிக்க மகிழ்ச்சியை அடைந்த அக்குறவர் புனத்திலே விளேந்த தினையைப் பொங்கி விருந்து அயர்கிருர்கள். -

மலைவான் கொள்கென உயர்பலி தூஉய் மாரி ஆன்று மழைமேக்கு உயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய உவகையர், சாரல் புனத்தினை அயிலும் நாட.

|வான்கொள்க - மழையைப் பெறுக, பலி - பூசைக்குரிய பண்டங்கள். ஆன்று-கின்று. மழை-மேகம். மேக்கு-மேலே, பெயல் கண் மாறிய-மழை வேறிடத்துக்குச் சென்ற தல்ை உண்டான. அயிலும் உண்ணும்.1 . . -

குறவர் மாக்கள் வணங்கும் கடவுள் முருகன் தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

பொதினி ஆண்டவனுக்குக் கோயிலும் அக்காலத் தில் இருந்தது. பொன்பொதிந்த திருக்கோயிலென்று கூடத் தோன்றுகிறது.