பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பெரும் பெயர் முருகன்

செல்லும் நெடுவழிப் பிரயாணத்தில் உபயோகப்படும் அவல் அது. அதை இசையின் றியே பாடலாம், தனி அவலேச் சுவைப்பதுபோல; கைத்தாளம் கொட்டிப் பாட ல்ாம், வெல்லத்தைக் கடித்துக் கொண்டு அவலே உண்பது போல; இசையோடு பாடலாம், ஊறவைத்த அவலே உண்பதுபோல. தக்க பக்க வாத்தியங்களுடன் பெரிய கச்சேரியாகச் செய்யலாம், அவல் பாயசம் பண்ணுவது போல.

அவல் எப்படி எளியதாகவும், இனியதாகவும், சமயத் துக்கு உதவுவதாகவும் இருக்கிறதோ, அப்படியே திருப் புகழும் இருக்கிறது. கவியின் அமைப்புக்கு உண்ணும் பொருள்களை உவமை கூறுவது மரபு. மிகவும் கடினமான பாக்களுக்குத் தேங்காயை உவமை கூறுவார்கள்; அத் தகைய கவிகள் நாளிகேர பாகமுடையவை என்பார்கள். மாம்பழச் சுவைபோல அமைந்த சஹகார பாகம், திராட்சா பாகம், இட்சு (கரும்பு) பாகம், rர (பால்) பாகம் என்று செய்யுட் பாகங்கள் பல உண்டு. உண்ணும் கனியையும் அமுதத்தையும் பாக்களுக்குப் பிறர் உவமை கூறினர். அருணகிரி நாதர் மற்றவர் கூறியதையே கூருமல் புதிதாக அவலக் கூறினர். தொப்பையப்பனப் பாராட்டும்போது கரும்பும் கனியும் உண்பவர் என் பதோடு அவலேயும் உண்ணும் விருப்பம் உடையவர் என்று அருணகிரி நாதர் சொல்கிருர்.

கைத்தலம் நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் என்றும்,

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன்நெய் எட்பொரி அவல்துவரை இளநீர்வண்' -