பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டை விலங்கு 137

என்று யோசிக்கிருன். நான்கு தலைகளேயும் எட்டுக் கைகளால் அமுக்கி அமுக்கி யோசிக்கிருன், அந்த அந்த உயிர்களின் பூர்வ ஜன்ம சரித்திரத்தை எடுத்துப் பார்க் கிருன். அந்தச் சரித்திரத்தில் உள்ள லாபநஷ்டக் கணக்கைக் கருராக’க் கணக்குப் பண்ணுகிருன். புண்ணி யம் இத்தனே, பாவம் இத்தனை என்ற லாபநஷ்டக் கணக் குப் பார்த்து முடிவு கட்டுவதில் நான்முகன் மிகவும் கெட்டிக்காரன்.

பழங்கணக்குகளேப் பார்த்துப் பார்த்து, அடுத்தபடி என்ன பிறப்பு அளிப்பது என்று யோசித்து யோசித்து முடிவு கட்டி, தனியே பட்டோலையில் அந்த முடிவை எழுதிக் கொள்கிருன்.

‘இவன் கோவில் தர்ம சொத்தைக் கொள்ளேயடித் தவன். சரி, இவனே வெளவாலாகப் பிறக்கும்படி செய் வேண்டும்.’

‘இவன் தர்மம் செய்கிறவனேச் செய்யாதே என்று தடுத்தவன். இவன் கையில்லாத முடவகைப் பிறக் கட்டும். - -

‘இவன் நல்லவர்களைக் கடுமையான சொற்கள் கூறிக் கண்ணிர் விடச் செய்தவன். இவனுக்கு ஊமைப் பிறப்பைக் கொடுப்போம். . . .

இவன் தான் மணந்த மனேவிக்கு இன்பந்தராமல், ஒழுக்கக் கேடுள்ளவகை வாழ்ந்தான். இவனுக்கு அலியாகப் பிறக்கும் பிறப்புத்தான் ஏற்றது."-இப்படி யாக அவன் கணக்குப் போட்டு முடிவு கட்டுகிருன்.

கட்டைப் பார்த்தால் பிரம்மாண்டமாக இருக்கிறது. 'இன்றைக்குள்ளே முடிவு கட்டவேண்டிய தொகை அதிக மாக இருக்கிறதே! என்ற யோசனை அவனுக்கு வரு கிறது. தன் வேலையை வேகமாகக் கவனிக்கத் தொடங்கு