பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டை விலங்கு 141

  • சுவாமி, நன்ருகத் தெரியும்.”

அப்படியால்ை ஏன் இன்று ஒர் அடியவனே உன் பட்டோலேயில் எழுதிய்ை?”

"அவசரத்தில் அறியாமல் செய்ததாக இருக்கும். அபசாரத்தைப் பொறுத்தருள வேண்டும்.”

பொறுப்பதாவது! இப்படிய்ே விட்டுவிட்டால் உனக்கு கினேவு இராது. இப்போது உனக்குக் கொடுக்கும் தண்டனை உன் ஞாபகத்திலே இருக்கவேண்டும். அப்போதுதான் நீ மறு முறை இத்தகைய தவறு செய்ய மாட்டாய்.” х .

சுவாமியின் திருவுள்ளம் அதுவால்ை இந்தப் பாவி எப்படி மாற்ற முடியும்?’-பிரமதேவன் அழாக் குறையாக விடை சொன்னன்.

வீரா, கொண்டு வா விலங்குகளே. போன தடவை நம்மை அவமதித்ததற்காக இவனுக்கு ஒரு விலங்கு போட்டோம். இப்போது இரண்டு விலங்கு போட வேண்டும். நமக்குச் செய்யும் அபசாரத்தைவிட நம் அடியாருக்குச் செய்யும் அபசாரம் இரண்டு பங்கு தண்டனைக்கு உரியது என்று தெரிந்து கொள்ளட்டும்: என்று வடிவேற் பெருமான் கட்டளையிட்டான்.

அடுத்த கணத்தில் இரண்டு விலங்குகள் வந்து விட்டன. பிரமதேவன் கண்ணிர் மாலை மாலேயாக வழிய கின்றன். "மாட்டு விலங்குகளே' என்று ஆண்டவன் உத்தரவிட்டுவிட்டுச் சற்று அந்தப்புரம் போய் வரலாம் என்று புறப்பட்டான். . . . . - -

வீரன் பிரமதேவன் காலில் இரண்டு விலங்குகளையும் பூட்டிவிட்டான். அடுத்தபடி என்ன செய்வதென்று உத்தரவுக்குக் காத்துக் கொண்டு நின்ருர்கள் யாவரும்.