பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பெரும் பெயர் முருகன்

கோட்டு வேலர் என்று வழங்குவது வழக்கம். "நாகாசல வேலவ" என்ற தொடர் இந்த வழக்கத்தை கினேந்து பாடிய தென்றே தோற்றுகிறது.

அருணகிரி நாதர் அநுபூதியில் பிற தலங்களில் ஒன்றையும் குறிக்காமல் திருச்செங்கோட்டை மாத்திரம் குறிப்பிடக் காரணம் என்ன? இது ஆராய்ச்சி செய்வ தற்குரியது.

அறுபது வயசுக்கு மேல் ஆன ஒர் ஆடவரும் அவ ருடைய மனேவியும் சென்னையில் வாழ்ந்து வந்தார்கள். நல்ல வசதியான வாழ்க்கை. மூன்றடுக்கு மாடி விடும் பொருளும் பிற பண்டங்களும் குறைவின்றிப் பெற்றவர் கள். இப்போது இந்த வள வாழ்வில் இருப்பினும் இளமையிலே வறுமைக்கு ஆளானவர்கள். சின்னஞ் சிறு கிராமத்தில் ஒட்டைக் கூரை விட்டிலே அந்த ஆடவர் வாழ்ந்தவர். அப்போதே அவருக்குத் திருமணம் ஆகி விட்டது. அந்தக் கூரை வீட்டில் ஒரு சிறிய அறையிலே அவர் கடிமணம் புரிந்து கொண்டார்.

முதுமைப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்த அவர்கள் இப்போது தம் கிராமத்துக்குச் சென்ருர்கள். பழைய கூரை வீட்டை ஒருவாறு செப்பஞ் செய்திருந்தார் கள். அங்கே போய்த் தாம் சந்தித்த அறையில் போய்த் தாம் முதல் முதல் சந்தித்த அறையில் போய் கின்றர்கள். அப்போது அந்த இருவருக்கும் உண்டான இன்பத்துக்கு எல்லேயே இல்லை. பழைய ஞாபகங்களெல்லாம் வந்தன. மாட மாளிகையில் வாழும் இன்பத்தை அதுபவிப்பவர் களானலும், பழமையின் கினைவு மீதுார முதல் முதல் இன்பம் பெற்ற அவ்விடம் எவ்வளவோ உயர்வாகத் தோன்றியது அவர்களுக்கு.