பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகாசல வேலவன் 147

இது மனித இயற்கை அருணகிரி நாதரும் இத் தகைய மன இயல்பிலே பாடியபாட்டு இது. பலபல தலங் களுக்குச் சென்று பாடிய அப்பெருமான் ஒவ்வொரு தலத் திலும் ஒவ்வொரு விண்ணப்பத்தைப் போட்டு வைத்தார். செங்கோட்டிலும் ஒருவிண்ணப்பம் செய்து கொண்டார். அப்படியே அது பலித்து விட்டது. செங்கோட்டிற் செய்து கொண்ட விண்ணப்பம் பலித்துப் பயன்பெற்ற காலத்தில், குறிப்பிட்டவிண்ணப்பம் போட்ட இடத்தை மறக்க முடி யுமா? அந்தக்கிழத் தம்பதிகளைப் போல நன்றியறிவும் பழமைகினவும் மீதுார காகாசலத்தை மறவாமல்பாடினர்.

、*T

அவர் என்ன விண்ணப்பம் செய்து கொண்டார்?

தெய்வத் திருமலைச் செங்கோட்டில்

வாழும் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவ னேமற

வேன் உனை நான்; ஐவர்க்கு இடம்பெறக் கால்இரண்டு

ஒட்டி அதில்இரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து

காத்தருளே என்ற கந்தர் அலங்காரப் பாட்டுத்தான் அந்த விண்ணப் பம். 'தெய்விக சக்தி பொருந்திய அழகிய மலேயாகிய திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் செழித்த சோதி உருவப் பொருளே, கூர்மையை உடைய வேலாயுதத்தைக் கொண்ட தேவா, நீ என் வேண்டுகோளே நிறைவேற்றி ல்ை நான் என்றும் உன்னை மறக்கவே மாட்டேன். ஐந்து இந்திரியங்கள் வாழ்வதற்கு இடம் உண்டாகும்படியாக, இரண்டு கால வைத்து, அதில் இரண்டு கைகளையும் வைத்த வீடாகிய இந்த உடம்பு, மரணத்தினுல் அழி