பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பெரும் பெயர் முருகன்

வதற்கு முன்னே நீ எழுந்தருளி வந்து பாதுகாத்து அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். - பூவுலகில் இருந்தாலும் தெய்வத்தன்மை உடையமலை திருச்செங்கோடு என்று சொல்கிருர். அங்கே செங் கோட்டு வேலன் எழுந்தருளி யிருப்பதை, "வைவைத்த வேற்படை வானவனே' என்று குறிக்கின்ருர். பூத உடல் இறந்துபட உயிர்பிரிந்து செல்வது இயற்கை. இந்த மாதிரி மரணம் தமக்கு வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். மரணம் சம்பவிக்கு முன்னே வந்து பாது காக்க வேண்டுமென்பது அவர் பிரார்த்தன.

இந்த வேண்டுகோள் பலித்தால் உன்னை மறவாமல் நினைப்பேன் என்றும் சொன்னர்.

பிரார்த்தனை பலித்தது. அருணகிரிநாதர் பிறர் உடம்பை ப்ேபதுபோல நீத்தார் இலர். பூத உடம்பு மறைய, கிளி உருவைப் பெற்றனர். "ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு கைவைத்த வீடு குலேயுமுன் முருகவேள் அருள் செய்தான்; தெய்வத் திருமலையில் உள்ள வேற்படை வானவனிடம் சமர்ப்பித்த விண்ணப்பம் பயன்பெற்றது. அப்போது சொன்ன வாக்கைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா? மறவேன் உனே நான்' என்று வாக்களித்தாரே! அதை மெய்ப்பிக்க வேண்டுமல்லவா? ஆகவே, பூத உடலுக்குப் புறம்பே, அநுபூதி பெற்று கின்ற கிலேயில், மற்றத் தலங்களே மறந் தாலும், திருச்செங்கோட்டை மறக்கவில்லே, தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே, வைவைத்த வேற்படை வானவனே என்று விரிவாகச் சொன்னதை "நாகாசல வேலவ! என்று சுருக்கமாகச்