பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகாசல வேலவன் 149

சொல்கிருர். அவனே மறவாமல் கினைப்பதொடா? அந்த கினைப்பைப் பாட்டாகப் பாடும் ஆற்றலை அந்தப் பெரு மானே அருணகிரி நாதருக்குத் தந்திருக்கிருன் நாலு கவியையும் தியாகம் செய்திருக்கிருன். அப்படி இருக்கை யில் மறவாமல் கினைத்துப் பாடுவது தானே கியாயம்? ஆகவே நாகாசல வேலவனே மறவாமல் பாடுகிருர்,

கூகா என என் கிளைகூ டிஅழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகா சலவே லவநா லுகவித் தியாகா சுரலோ கசிகா மணியே.

"நாகாசல வேலவனே! ஆசு, மதுரம், விஸ்தாரம், சித்திரம் என்னும் நால்வகைக் கருவிகளையும் பாடும் திறமையையும் எனக்கு அருளியபெருமானே! தேவலோக வாசிகளின் சென்னியிலே மணிபோல முடித்தற்குரிய தலைவனே! நீ செய்த உபகாரத்தை என்னென்று சொல் வேன்! உலகத்தில் ஏனே மாந்தர்கள் திறத்தில் உடம்பை விட்டு உயிர் நீங்கும்போது சுற்றத்தார் யாவரும் கூடிக் கூகா என அழுது புலம்புவார்கள். அப்படி என் கிளே கூடி அழுது கிற்க, நான் மரணத்தை அடையாமல், உண்மை யான உபதேசத்தைச் செய்தவாறு என்ன ஆச்சரியம்!" என்று அவர் பாராட்டி வியக்கிரு.ர். -

மற்றவர்கள் இறப்பதுபோல இறக்கக் கூடாது. அதற்கு முன்னே வேலவன் திருவருளே அடைய வேண் டும்' என்ற ஆசையைக் கந்தர் அலங்காரப் பாட்டில் வெளியிட்டார்; செங்கோட்டு வேலவனிடத்தில் விண்ணப் பம் செய்து கொண்டார். முருகன் அருள் செய்தான். உடம்பு அழிய உயிர்போகும் கிலே அவருக்கு வரவில்லை. அவர் பெற்ற அருள் அதிசயமானது. அந்த அதிசயத்தை அநுபூதியிலே சொல்கிருர்,