பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியும் துகிரும்

உலக வழக்கில் சில பொருள்களைச் சேர்த்துச் சொல்லும் பொழுது இனம் பற்றிச் சேர்ப்பார்கள். சில பொருள்களைச் சேர்த்தே வழங்குவார்கள். பூவும் பிஞ்சும், காயும் கனியும், நெல்லும் புல்லும், வெற்றிலேயும் பாக்கும், ருேம் நிழலும், உடையும் உணவும் என்பன போலப் பல தொடர்கள் உண்டு. அப்படி வரும் தொடர்களுள் முத்தும் பவளமும் என்பது ஒன்று.

முத்தும் பவளமும் கடலிலே உண்டாகும் பொருள் கள்; நவமணிகளில் சேர்ந்தவை. இந்த இரண்டையும். கோத்து அணியும் வழக்கம் உண்டு. அந்தக் கோவைக்கு இரட்டை மணி மாலை யென்று பெயர். தமிழ்ப் பிரபந்த வகை ஒன்றுக்குக்கூட அப்பெயர் வழங்கும். முத்தும் பவளமும் கலந்தது போல ஒருவகை நடைக்கு 'மணிப் பிரவாளம்” என்ற பெயர் உண்டு. திவ்யப் பிரபந்த வியாக் கியானங்களிலும், ஜைன நூல்கள் சிலவற்றிலும் இந்த மணிப் பிரவாள நடையைக் காணலாம். தமிழில் மணி மிடை பவளம்’ என்று இந்தக் கூட்டுறவைச் சொல்லுவார் கள். அகநானூறு என்ற பழந்தமிழ் நூலின் ஒரு பகுதிக்கு மணிமிடை பவளம் என்ற பெயரை அமைத்திருக்கிருர் கள். சில சமயங்களில் மணி என்பது வேறு மணியையும் குறிப்பதுண்டு. * , * . . . . .

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் . • இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து