பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியும் துகிரும் 153

ஒரு பாடலைப் பலர் பாடஞ் செய்து சொல்வதனலும், ஒன்றைப் பார்த்து மற்ருெரு பிரதி செய்வதனாலும் பாட பேதங்கள் பல உண்டாகின்றன என்பது ஏடுகளைப் பற்றிய ஆராய்ச்சி யுடையாருக்குத் தெரியும். 'படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத் தான்” என்ற பழமொழி, சில பாடபேதங்களால் மூலம் உருக்குலைவதை நோக்கி எழுந்தது.

இந்தப் பாட்டின் முதலடி தவருண பாட முடையதாகத் தோற்றுகிறது. மணியும் அதனோடு இனமொத்த துகிரும் சேர்ந்து வழங்குவதை இலக்கியத்தில் காண்கிருேம். இங்கும் துாசா மணியும் துகிரும் புனைவாள்' என்று இருப் பது பொருத்தமாகத் தோன்றுகிறது. இனமொத்த பொரு ளாக இருக்கும் பொருத்தம் ஒன்று. "யாவரும் ஆடை வேறு அணி வேருக அணிவார்கள்; மணியும் பவளமும் அருமையாகக் கிடைப்பதனால் அவற்றை ஆபரணமாக அணிவார்கள். இப்பிராட்டிக்கு அவை எளிதிற் கிடைப் பன ஆதலால் அவற்றையே கோத்து ஆடையாக அணி கிருள்' என்று வளப்பு மிகுதியைக் குறிக்கும் பொருட் சிறப்பும் இதற்ை கிடைக்கிறது. ஆகவே, தூசா மணியும் துகிரும் புனைவாள்' என்ற பாடமே பழைய பாடமாக இருக் திருக்க வேண்டுமென்று தோற்றுகிறது.