பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பெரும் பெயர் முருகன் அன்று. மதுரையையும் வையையும் பாடும் பாடல்களில் திருப்பரங்குன்றமும் அங்கே எழுந்தருளிய முருகன் புகழும் விரவி வரும். புலவர்கள் அடிக்கடி முருகனைப் பாராட்டிப் பாடும் இயல்புடையவர்களாக இருந்தன ரென்பற்குப் பரிபாடலும் ஒரு சாட்சியாக கிற்கிறது.

கடைச்சங்க காலத்தில் ஆலவாயில் எழுந்தருளி யிருக்கும் இறைவர் அகப்பொருள் நூல் ஒன்றை இயற்றித் தந்தார். அறுபது சூத்திரங்களையுடைய அந்த நூலுக்கு இறையனரகப் பொருள், களவியல் என்னும் பெயர்கள் வழங்கும்.

இலக்கண நூலுக்கு உரை இன்றியமையாதது. விரிந்த பொருள்களே அடக்கிச் சுருக்கமாகச் சூத்திர உருவத்தில் முல ஆசிரியர்கள் இலக்கணத்தை அமைத்துச் சொல்வார்கள், அவ்வக் காலத்துக்கு ஏற்ற வகையில் அதற்குப் பொருள் விரித்து உரையெழுதி உதாரணங் காட்டி அதனைப் பயன்படச் செய்வது உரையாசிரியர் கடமை. பழைய தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத் துக்குப் பல உரைகள் உண்டு.

இறைவர் இயற்றிய அகப்பொருளுக்கும் பல உரைகள் எழுந்தன. எல்லாம் ஒரே காலத்தில் எழுந்தன. ஒரே காலத்தில் பலர் உரை எழுதினால் எது சிறந்தது என்ற குழப்பம் நேரும் அல்லவா? கடைச் சங்கப் புலவர் யாவரும் பாண்டிய மன்னனது வேண்டுகோளுக்கு இணங்கி ஆளுக்கு ஒருரை எழுதினர்கள். அத்தனை உரையையும் வாசிப்பது சாத்தியமான காரியமா? அவற் றுள், 'இதுதான் சிறந்தது" என்று எப்படி ஒன்றைத் தேர்ந்தெடுப்பது? ஒருவரோடொருவர் சமானமாக இருந்த அப் புலவர் கூட்டத்தினர் எழுதிய உரைகளே ஆராய வேண்டுமானல், அவர்களேவிட மிஞ்சிய புலமை படைத்த