பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் ಹL/5)

முருகவேளுடைய பெருமையைத் தமிழ்நாட்டார் பழங் காலமுதல் உணர்ந்து பாராட்டி, அப் பெருமானப் போற்றி, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் கால் வகைப் பயனேயும் பெற்ருர்கள். நெடுங்காலமாகப் புலவர் பெருமக்களால் வளர்க்கப்பட்டு வரும் தமிழில் உள்ள பல நூல்கள் அங்கங்கே முருகனைப்பற்றிய செய்திகளைத் தருகின்றன. தமிழுக்கே சிறப்பாக உரியது என்று சொல்லப் பெறும் அகப்பொருள் அமைதியை யுடைய பாடல்களில் மிகுதியாக முருகனைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அதற்குக் காரணம், தமிழர் வரம்புகட்டிப் போற்றிய அகப்பொருள் ஒழுக்கமாகிய காதல் நாடகம் ஆரம்பிக்கும் முதல் கிலத்தின் தெய்வமாக முருகன் அமைந்ததுதான். -

நிலப்பரப்பை ஐந்தாக வகுத்து மலையும் அதனேச் சார்ந்த இடமும் குறிஞ்சியெனக் கொண்ட தமிழர் அந்நிலத்துக்குத் தெய்வமாக முருகனே வைத்து வழி பட்டனர். குறிஞ்சி என்ற பெயர் அந்த நிலத்தில் அருமையாக வளர்ந்து மலரும் குறிஞ்சிப் பூவிலிருந்து வந்தது. அம்மலர் நீலநிறமுடையது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது மலருமாம்.

சேயோன்

குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வம் முருகன் என்பதைத் -

தொல்காப்பியர், - - - - - -

சேயோன் மேய மைவரை உலகமும் QLIQUjib—2