பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் நூல்கள் g7

சங்கிதை, சூர சங்கிதை என்று ஆறு பிரிவாக உள்ளது. அந்த ஆறு பிரிவில் ஒன்ருகிய சங்கர சங்கிதை பன்னிரண்டு பகுதிகளே உடையது. அந்தப் பன்னிரண்டிலும் முதலாவ தாக அமைந்தது சிவரகசிய கண்டம் என்பது. அப்பகுதி யும் ஏழு காண்டங்களால் அமைந்தது. அந்த ஏழில் முதல்' ஆறையும் தமிழ்ப் பாவில்ை இயற்றினர் கச்சியப்ப சிவா சாரியார் என்ற புலவர் பெருமான். ஏழாவது காண்டமாகிய, உபதேச காண்டத்தைத் தனியே கோனேரியப்ப நாவலர் என்னும் புலவர் பாடியிருக்கிரு.ர்.

தமிழ்நாட்டில் பல அன்பர்கள் கந்தபுராணத்தைப் பாராயணம் செய்து வந்தனர். ஆறு காண்டங்களும், 94 படலங்களும், 10,346 செய்யுட்களும் உடையது தமிழ்க் கந்தபுராணம். அதன் விரிவை நோக்கிய சிலர் முருக வேளுடைய வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல் ஒன்று வேண்டுமென்று விரும்பினர். திருக்கைலாய பரம் பரைத் தருமபுர ஆதீனத்தைச் சார்ந்த பூரீ சம்பந்த சரணு லய சுவாமிகள் என்னும் பெரியார் 10.49 செய்யுட்களில் கந்தபுராணச் சுருக்கம் என்ற நூலே இயற்றினர். கந்த புராணத்தில் உள்ள விரிவான வருணனைகளையும், சில உபாக்கியானங்களேயும் விலக்கிவிட்டு, அதில் விரிவாகச் சொல்லப்பெற்ற வரலாறுகளைச் சுருக்கமாக அமைத்து, அந்நூலே அவர் இயற்றினர். . . . " .

புராண வகையில் அமைந்த முருகன் வரலாறு இது. இதிகாசமாகிய இராமாயணத்தில் முருகன் வரலாறு சொல்லப் பெறுகிறது. விசுவாமித்திர முனிவர் தம்முடைய வேள்வியைப் பாதுகாக்கும் பொருட்டு, இராமனேயும் லக்ஷ்மணனயும் அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் காமன் இறைவன் திருநுதற்கண்ணிற்ை பட்டு விழுந்த இடத்தைக் காண்கிருர்கள். அதன் வரலாறு யாதென்று கேட்ட இராமனுக்கு விசுவாமித்திரர். காமசங்காரக் கதை,