பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவன் இளவெயினனர் பாட்டு

கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்கள் சமரச நோக்கோடு வாழ்ந்தனர். எல்லாத் தெய்வங்களிடத்தும் மதிப்புடையவர்களாக இருந்தனர். ஒரு தெய்வத்தினிடம் ஆழ்ந்த அன்பு உடையவர்களாய் அத்தெய்வத்தையே வழிபடு கடவுளாகக் கொண்டிருக்கலாம். அதல்ை மற்றத் தெய்வங்களே வெறுக்கும் தன்மை அவர்களிடம் இல்லை.

இப்படி இருந்த புலவர்களுக்குள் கடுவன் இள வெயினனர் என்பவர் ஒருவர், இவர் வேட்டுவக் குலத்திலே பிறந்தவரென்று தோன்றுகிறது. இவர் கடைச். சங்கப் புலவர்களில் ஒருவர்; இனிய பாக்களே இயற்றும் வன்மையுடையவர். .

பழைய காலத்தில் புலவர்கள் பாடி வந்த பாடல்கள் பலவிதமாக இருந்தன. இப்போது அதிகமாக விருத்த வகைகளில் புலவர்கள் பாடுகிருர்கள். சுப்பிரமணிய பாரதியாரைப் பின்பற்றும் புதிய புலவர்கள் இசைப் பாட்டுகளைப் பாடுகிருர்கள். -

பழங்காலத்தில் அகவற்பாவில் புலவர்கள் தம் திறமையைக் காட்டினர். வெண்பா, கலிப்பா என்ற வகையிலும் பல பாடல்களே இயற்றினர். அவற்றை இப் போதும் பாடுபவர்கள் இருக்கிருர்கள். ஆல்ை, ஒருவகை யான பாட்டு மிகப் பழங்கால முதல் இருந்து வந்து, வரவரப் பாடுவார் இல்லாத நிலைக்கு வந்திருக்கிறது. பரிபாடல் என்று அதற்குப் பெயர். அது இயலும்