பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பெரும் பெயர் முருகன்

யிற்றே என்று இராமன் சிறிது எண்ணி நிற்கையில் முனி வர், இவளேப் பெண் என்று கினேக்கலாமா? பேதைமை யுடைய பெண் என்று கினைத்தல் அறிவாகாது. உலகில் நிலை பெற்ற உயிர்களை யெல்லாம் வாரி வாரித் தன் வாயிலே போட்டுக் கொள்ளுகிறவள் இவள். இதைக் காட்டிலும் கொடிய பாவம் வேறு என்ன இருக் கிறது? அந்தப் பாவத்தைச் செய்பவர்களே ஒரு கணம் உலகத்தில் இருக்கும்படி செய்யலாமா? பெண் ணென்று கினைக்கலாமா?’ என்று வற்புறுத்துகிருர்.

மன்னும் பல்உயிர் வாரித்தன் வாய்ப்பெய்து தின்னும் புன்மையில் தீமையது ஏதைய? பின்னும் தாழ்குழற் பேதைமைப் பெண் இவள் என்னும் தன்மை எளிமையின் பாலதே! என்பது கம்பர் பாட்டு. இராமன் இது கேட்டபின் தாடகையைச் சங்கரித்தான்.

இதே கியாயத்தால் வேலானது அவுணர் குலமற அழித்தது. இதைப் புலவர். 'கொன்று உணல் அஞ்சாக் கொடுவினைக் கொல்தகை, மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்” என்ற அடிகளால் தெளிவாக்குகிரு.ர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அவர்கள் மற்ற உயிர்களைக் கொன்ருர்கள்; அதனால் கொலேயுண் டார்கள். -