பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி பாட்கு

தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக வழிபடப்பெறும் கடவுள் முருகன் என்று சொல்வது புலவர் வழக்கம். மற்றக் கட வுளரை வழிபடும் முறைகள் இருக்கவும் முருக வழிபாட்டு தமிழருக்கே சிறப்பாக உரியதென்பதற்குப் பல காரணங் கள் சொல்லலாம். தமிழ் மொழியினுடைய வளர்ச்சியில் முருகனுடைய தொடர்பு மிகுதியாக இருக்கிறது. தமிழ்நாட் டிலே திருவவதாரம் செய்த வள்ளியெம் பெருமாட்டியை முருகன் மணந்துகொண்டான். சூர சங்காரம் செய்து வெற்றி கொண்டாடிய இடம் தமிழ் நாட்டில் உள்ள திருச் சிரலைவாயாகிய திருச்செந்தூர். தேவயானையின் திருமணம் திருப்பரங்குன்றத்திலே நிகழ்ந்தது. முருகனைப் புகழ்வதற். குரிய தோத்திர நூல்கள் தமிழில்தான் மிகுதியாக உள் ளன. அன்றும் இன்றும் முருகன் ஆவேச ரூபமாக வந்து வேண்டுவார் வேண்டுவன அருள் செய்யும் பிரத்தியட்ச தெய்வமாகத் தமிழ் நாட்டில் விளையாடுகிருன். * --

இந்த காட்டில் முருக வழிபாடு சிறந்து கிற்பதை எவ், வாறு அறிவது? தமிழ் நாட்டினருடைய உணவு நெல்லஞ் சோறு என்று சொல்கிருேம்; கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு முதலிய பிற உணவுகளே உண்பார் இருந்தாலும் ஏழை முதல் செல்வர் வரையில் யாவரும் அரிசிச் சோற்றை உண்கிருர்கள். ஏழையர் முதல் செல்வர் வரையில் விரவி - త్థ தன்மை அதன் தலைமையை வெளிப்படுத்து

கிறது.