பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ0 . பெரும் பெயர் முருகன்

நாடு முழுவதும் முருகனே வழிபட்டார்களாயினும், மலேயும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சிக்குத் தனி உரிமை பூண்டவன் முருகன். அந்த நிலத்தில் பெரும் பாலும் முருக வழிபாடே கிலவும். விலங்குகளைக் கொன்று தின்றும் தின விளைவித்து உண்டும் வாழும் குறவருக்கு முருகன் வழிபடு கடவுள். அக்குறவர்களுக்குத் தெய்வ உணர்ச்சியை உண்டாக்கி அவர்களுக்குப் பிரதிநிதியாக முருகனை வழிபடும் பூசாரிக்கு வேலன் என்று பெயர். அவன் தன் கையில் வேலை வைத்துக்கொண்டு ஆடுவான். அதல்ை அப் பெயர் உண்டாயிற்று. முருகனுடைய விக் கிரகத்தைப் பாதுகாத்துப் பூசித்து வருபவன் ஆகையால் அவனைப் படிமத்தான் என்று கூறுவதுண்டு. படிமம் என்பது விக்கிரகத்துக்கு ஒரு பெயர். .

வேலன் குறவருக்குக் குரு ; முருகன் கோயிற் பூசாரி. அவனும் முருகனுடைய உண்மையான உயர்வை அறிந்த வன் அல்ல. தினயரிசியை வைத்து ஆட்டைப் பலியிட் டுப்பூவும் புகையும் கொண்டு முருக வேளைப் பூசை செய் வான். தனக்குத் தெரிந்த வகையில் அப்பெருமானத் துதிப்பான். அங்கேயும் முருகன் அவர்களுடைய அன் பொன்றையே கருதி வெளிப்படுவான். அவர்களுக்கு வேண்டிய நன்மைகளே அருள் செய்வான். அருவமும் உருவும் ஆகி அகாதியாய்ப் பலவாய் ஒன்ருய்ப் பிரமமாய், கின்ற முருகன், வேலன் வெறியாட்டிலே செய்யும் உபசா ரங்களை உவந்து, அவன் செய்யும் தோத்திரங்களேயும் ஏற் றுக்கொண்டு அங்கே வெளிப்படும் செயல் வியக்கத் தக்கது. உலகமெல்லாம் ஆக்கி அளித்து அழிக்கும் கடவுள் அந்த நாகரிகமற்ற மக்கள் கூட்டத்திற்கும் இனியனுக எழுந்தருள்கிருனே வேலன் ஏத்தும் வெறிப்பாட்டு உண் மையாக முருகவேளின் புகழைச் சொல்வதா? அல்லவே! கடுவன் இள எயினனர் இந்தச் செய்திகளை நினைத் துப் பார்க்கிருர். "என்ன ஆச்சரியம்! இந்தப் பைத்தியக்