பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையா, பொய்யா? 57

பாட்டுக்கள் உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல' என்று எதிர்மறை வாய்பாட்டிலே சொல்கிருர். பொய் என்னுமல் உண்மை அல்ல என்கிருர்; மெய் என் மைல் பொய்யும் அல்ல என்கிரு.ர். இரண்டு தன்மையும் கலந்த வியப்புக்குரிய செய்தியாக இருக்கிறது முருகன் இயல்பு. - -

அவை, வாயும் அல்ல பொய்யும் அல்ல.

(அந்தப் பாட்டுக்கள் உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல. - வாய் - உண்மை.) - ‘. . . . . . . . . . . .

இப்படிச் சொன்ன புலவருக்கு மேலே யோசனை படர்கிறது. முருகன் திருவவதாரம் அவர் ஞாபகத்திற்கு வருகிறது. அவனுடைய திருவவதாரம் மனிதன் பிறவி எடுப்பது போன்றதொரு காரியமா? பிறவியில்ை உயர்வும் தாழ்வும் கற்பிக்கிருர்களே பைத்தியக்கார உலகத்தார், அந்த வகையில் சேர்ந்ததா அவன் அவதாரம்? புண்ணி யங்களைச் செய்தவர் சிறந்த பிறவியையும், பாவம் செய் தவர் இழிந்த பிறவியையும் பெறுவார்கள் என்று சொல்லு கிருர்களே, முருகன் திருவவதாரம் புண்ணியப்பயன? பாவப் பயன? இப்படிப் பலபல கேள்விகள் புலவர் உள்ளத்தே எழுகின்றன. " . . . . : ' ' ' '. ... ."