பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெரும் பெயர் முருகன்

வயிறு வாய்க்கப் பெற்ருர்கள். கிறை-இங்கே கற்பு. சூலினர்-சூல் கொண்டனர்.) . வேள்விப் பிரசாதத்தை உண்டமையால் வந்தது. கரு; தம் கணவர் கட்டளேக்கு இணங்கி அவ்வாறு செய்தனர். ஆதலின் புலவர் அவர்க்ளே, "மறுவறு கற்பின் மாதவர் மனேவியர்' என்று சொல்கிருர், அயின்றும் தம் கணவர் வேண்ட அயின்ற புரோடாசம் ஆதலால் மறுவற்ற கற்பினேயுடைய அம் மாதவர் மனைவி யர், நிறையுடைமையின் நீங்காதே கின்னேச் சூல் கொண்டார் என்று பரிமேலழகர் இந்தப் பகுதிக்கு உரை எழுதியிருக்கின்ருர், .

இவ்வாறு ஆறு மகளிரும் கொண்ட கருப்பம் முதிர்ந்தது. இமாசலத்தின் ஒருசார் திருப்பை படர்ந்த நீலப்பைஞ்சுனேயாகிய சரவண மென்னும் பூம்பொய்கை யில் அவர்கள் குழந்தையைப் பெற்ருர்கள். மெத்தென்ற தாமரை மலர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றனர். . .

நிவந்துஓங்கு இமயத்து நீலப் பைஞ்சனப் பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்.

(உயர்ந்து வளர்ந்த இமாசலத்தில் லேப்பைஞ்சுனையில் தாமரையாகிய படுக்கையில் உன்னப் பெற்றர்கள் என்று சொல்லுவார்கள். லேம் - நீலநிறமுடைய தர்ப்பை, அதற்குச் சரம் என்று வடமொழியிலே பெயர் உண்டு. சரவணம் என்பது தருப்பை நிறைந்த இட்ம் என்ற பொருளே உடையது. லேப் பைஞ்சுனே என்று சரவணத்தையே குறித்தார். கெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனே” என்று திருமுருகாற்றுப்படை யிலும் நக்கீரர் லேப்பைஞ்சுனே என்றே சொல்கிருர்.

முருகன் சரவணப் பூம்பொய்கையில் திருவவ.

தாரம் செய்தானென்ற வரலாற்றை யாவரும் அறிவர்.